SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்வி தொலைக்காட்சியில், புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

2021-06-19@ 10:34:08

சென்னை : கல்வி தொலைக்காட்சியில், புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல்காரணமாக பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாகபாடங்களை ஒளிபரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

புதிய காணொலிகள்

அதன்படி 2 முதல் 12-ம்வகுப்பு வரையான பாடங்களின் புதிய காணொலிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பு நிகழ்வை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். கல்வி தொலைக்காட்சியுடன்12 தனியார் தொலைக்காட்சிகளிலும் இந்தக் காணொலிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.மேலும், கல்வி தொலைக்காட்சியின் யூ-டியூப் தளத்திலும் பதிவேற்றப்படுகின்றன.இதைத் தொடர்ந்து 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எ.வ.வேலு,செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வானொலியில் ஒலிபரப்பு

இதுதவிர, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஒலி வடிவிலான பாடங்கள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்