SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்; அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்

2021-06-19@ 09:47:56

சென்னை: தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது. தமிழக அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து முதல்வர் தொடங்கி வைக்கிறார். தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்பட உள்ளன. அதற்கான அட்டவணையும் இன்று வெளியிடப்படுகிறது. வகுப்புகள் நடத்தப்படும்போது மாணவர்கள் அதை புரிந்துகொள்வதற்கு பாடப்புத்தகங்கள் அவசியம். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.


 அதன்படி, விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்தப் பள்ளிகள் சார்பில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட இருக்கின்றன. சில தனியார் பள்ளிகளில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரையில், கடந்த கல்வியாண்டில் கல்வி தொலைக்காட்சி மூலமும், அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் சிலரால் வாட்ஸ்-அப் மூலமும் மாணவர்களுக்கான பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்