SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவ இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-06-19@ 01:17:23

‘‘வசூல் குவிக்கிறார்களாமே இலை கட்சியினர்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மஞ்சள் மாவட்டத்தில், இலை கட்சியினர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதில் படு கில்லாடியாக உள்ளனர். கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக, இம்மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி இல்லை. அதனால், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து சரக்கு வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்கின்றனர். ₹180-க்கு விற்கப்படும் குவாட்டர் ₹500 முதல் ₹600 வரையும், பீர் பாட்டில் ₹400 முதல் ₹600 வரையும், உயர் ரக மது வகைகள் ₹5 ஆயிரம் முதல் பல ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்கின்றனர். மாநகர் மட்டும் அல்லாமல், புறநகர் பகுதியிலும் மது விற்பனை ஜரூராக நடக்கிறது. மாநகரில், கருங்கல்பாளையம், டவுன், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, மணல்மேடு, திண்டல், சோலார், மூலப்பாளையம், மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற பகுதிகளிலும், புறநகரில் கோபி, சத்தி, பவானி உள்ளிட்ட பகுதிகளிலும் இச்சட்ட விரோத மது விற்பனை ‘டாப்’பில் உள்ளது. இலை கட்சியினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு, சில காக்கிகள் உடந்தையாக இருப்பதால் வசூலுக்கு பஞ்சமில்லாத நிலை உள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘வெயிலூரு மாவட்டத்தில பணியாற்றும்  காக்கிங்க கள்ளச்சாராயம் காய்ச்சும் ஆசாமிகள், மணல் கடத்தல்காரர்களை கையில்  போட்டுக்கொண்டு மாதந்தோறும்  ப வைட்டமின் வாங்கிக்கொண்டு நடவடிக்கை  எடுப்பதில்லைனு சொல்றாங்களே..’’
 ‘‘ஆமா... விருதமான போலீஸ் ஸ்டேஷனில 2 ஸ்டார் அதிகாரி  ஒருவர் லாக்டவுன் நேரத்துல கூட வைட்டமினை அதிகளவில் வாங்குவதில் குறியாக  இருந்தாராம். மேலும் தள்ளுவண்டி, நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்து  வந்தாராம். இது தொடர்பான புகார்கள் உயர் அதிகாரியின் காதுக்கு போனது.  அதிகாரி விசாரணை நடத்தி ஆயுதப்படைக்கு தூக்கி அடித்து
விட்டார். இந்த 2  ஸ்டார் காக்கி, கடந்தாண்டு மதுபாட்டில் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளுக்கு  ஆதரவாக செயல்பட்டதால், அப்போதே தண்டனையாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.  ஓரிரு மாதங்களுக்கு முன்பு தான் விருதமான ஸ்ேடஷனுக்கு மாற்றப்பட்டார்.   ஆனாலும் மீண்டும் கைவரிசை காட்டி வசமாக சிக்கி உள்ளார்’’ என்றார்  விக்கியானந்தா.
 ‘‘ஹனிபீ மாவட்ட விவகாரம் என்ன...’’
 ‘‘இந்த மாவட்டத்துல நான்கெழுத்து  நகராட்சியில், சென்னைக்காரர் ஒருவர் 6 மாதங்களாக தலைமைப் பணியில்  இருக்கிறார்.  சேர்ந்த நாள் முதல் பயங்கர ஸ்ட்ரிக்ட். ‘‘எதில் தெரியுமா’’  என்று கேட்டு சிலாகிக்கிறார்கள் அலுவலக ஊழியர்கள். அதாவது கமிஷன் இல்லாமல்  இங்கு ஒரு வேலையும் நடக்காதாம். யார் சிபாரிசு செய்தாலும் தனக்கு வர  வேண்டியது வந்தால் மட்டுமே ‘‘க்ரீன் சிக்னல்’’ கொடுப்பாராம். இவர்  பொறுப்பேற்றது முதல் என்றால் கூட ஓகே சொல்லலாம், ஆனால் இவர்  பொறுப்பேற்பதற்கு முன் பெண்டிங்கில் உள்ள செக்குகளை க்ளியர் பண்ணவும் கூட  கரெக்டா கொடுக்க வேண்டியதை கொடுக்கணுமாம். இல்லையென்றால் அந்த செக்கை  பெண்டிங்ல போட்டுருவாராம்... இதுதொடர்பாக கேட்டால், ‘‘ஏற்கனவே பல மாதம்  செக் பெண்டிங்கில் உள்ளது. இன்னும் பல மாதம் பெண்டிங்கில் வைத்தால்  உங்களுக்கு சேர வேண்டிய தொகைக்கு வட்டியை கணக்கு போட்டு பாருங்கள். கொடுக்க  வேண்டியதை கொடுத்தால் உங்கள் செக் பாஸ் ஆகும்’’ என வெளிப்படையாக  பேசுகிறாராம். இது விவசாயம் சார்ந்த ஊர்... இங்கு பெரியளவில் தொழிற்சாலைகள்  இல்லையென ஊழியர்கள் கூறினாலும், அதையெல்லாம் காதில் வாங்கி  கொள்வதில்லையாம். இலைக்கட்சி ஆதரவாளரான இவர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டுமென சக அதிகாரிகள் கூறுகின்றனராம்...’’’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘குமரி மாவட்ட அதிமுகவில் இருந்து பல  முக்கிய நிர்வாகிகள், கட்சி தாவ முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி பரபரப்பை  உண்டாக்கி உள்ளதே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘உண்மைதான்.. தற்போது மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர  நிர்வாகிகள் பலர் இந்த பட்டியலில் உள்ளார்களாம். முன்னாள் எம்.எல்.ஏ.  ஒருவர் செல்வதும் உறுதியாகி விட்டதாம். ஏற்கனவே கடந்த சில வருடமாக கட்சி  நிர்வாகிகள் பெரிய அதிருப்தியில் இருந்து வந்தனர். மாவட்டத்தில் பொறுப்பில்  உள்ள சிலரின் செயல்பாடுகள் பிடிக்காமல் தேர்தல் பணியில் கூட ஆர்வம்  காட்டாமல் இருந்து வந்தவர்கள், இனியும் இந்த கட்சியில் இருந்தால் அரசியல்  எதிர்காலம் இல்லை என்ற முடிவால் கட்சி மாறும் முடிவுக்கு வந்ததாக  பேசப்படுகிறது. சசிகலாவின் செல்போன் பேச்சு பின்னர் யார், யார் தற்போதைய  தலைமைக்கு எதிராக மாற போகிறார்கள் என்ற தகவல் தெரியாத நிலையில், இப்போது  ஒரு பட்டாளமே கட்சி மாறி மாற்று முகாமுக்கு செல்ல இருப்பதும் பரபரப்பை  உண்டாக்கி உள்ளது’’ என்றார் விக்கியானந்தா.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

 • plastic-vaste-girl

  கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

 • farmeee112

  "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

 • arjennn11

  திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்