SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவ பரிசோதனைக்காக பயணிகள் விமானத்தில் அதிகாலை ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்படுகிறார்

2021-06-19@ 01:16:31

சென்னை: மருத்துவ பரிசோதனைக்காக பயணிகள் விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் அதிகாலை அமெரிக்கா புறப்படுகிறார்.  சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அமெரிக்காவில் சில மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்தார். பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். தற்போது சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார். இதை சிவா இயக்குகிறார். கொரோனா முதல் அலை பரவல் நேரத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உரிய பாதுகாப்புகளுடன் நடந்தது. அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த், உடனே சிகிச்சை பெற்று சென்னை திரும்பி ஓய்வு எடுத்தார். பிறகு மீண்டும் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார்.

மீண்டும் ரஜினிகாந்த் தன் உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ளவும், உரிய சிகிச்சை பெறவும் முடிவு செய்தார். ஆனால், கொரோனா 2வது அலை காரணமாக உடனே வெளிநாட்டுக்கு சிகிச்சை பெற செல்ல முடியவில்லை.  தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், உடல் பரிசோதனை செய்துகொள்ள அமெரிக்கா செல்ல திட்டமிட்ட ரஜினிகாந்த், தனி விமானத்தில் பயணிக்க முடிவு செய்தார். ஆனால், அதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததை தொடர்ந்து பயணிகள் விமானத்தில் செல்ல தீர்மானித்தார்.  இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3.40 மணிக்கு கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில்  கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா செல்லும் ரஜினிகாந்த், அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்கிறார். அவருடன் குடும்பத்தினரும் செல்கின்றனர். தற்போது அமெரிக்காவில் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்துக்கான படப்பிடிப்பில் தனுஷ் இருக்கிறார். அவருடன் மனைவி ஐஸ்வர்யாவும் தங்கி இருக்கிறார். ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றவுடன் அவர்கள் இவருடன் இணைந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் உடல் பரிசோதனை முடிந்து சிகிச்சை பெற்று, அங்கேயே சில வாரங்கள் தங்கி ஓய்வு எடுத்த பிறகே இந்தியா திரும்ப ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்