SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேரதிர்ச்சி

2021-06-19@ 01:13:47

நாட்டையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் கொரோனா பல்வேறு வடிவங்களில் உருமாறி பாதிப்பை ஏற்படுத்தி அனைவருக்கும் கண்ணாம்மூச்சி காட்டிக்கொண்டிருக்கிறது. இந்த கிருமி எங்கிருந்து உருவானது, எப்படி தாக்குதல் நடத்தி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற ஆய்வுகள் தொடர்ந்தாலும், குழப்பம் தொடர்கிறது. மருத்துவ நிபுணர்களே தலையை பிய்த்துக்கொண்டுள்ள நிலையில், கொரோனா 3வது அலை, டெல்டா வைரஸ் என்று புது அவதாரங்கள் எடுத்து அச்சுறுத்தல் காட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று லட்சக்கணக்கானவர்கள் கொரோனா கோரதாண்டவத்தில் சிக்கி உயிரிழந்தார்கள். கொரோனாவுக்கு  விலங்குகளும் தப்பவில்லை.

இப்படி அனைவரது அமைதியையும் கெடுத்து, நாட்டின் பொருளாதாரத்தையே நாசப்படுத்தி இன்னும் பசியடங்கவில்லை என்று கர்ஜனை செய்து கொண்டிருக்கும் கொரோனா தாக்கத்தில் இருந்து இந்த உலகம் விடுபடும் நன்னாளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். உலக அளவில் கொரோனா முதல் அலையை விட கொரோனா இரண்டாவது அலைக்கு உயிர்பலி அதிகரித்துள்ளது பேரதிர்ச்சியாகவே இருக்கிறது. முகக்கவசம், சோப்பு போட்டு கைகழுவுதல், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியன பாதுகாப்பு ஆயுதம் என்று விழிப்புணர்வு ஒருபக்கம் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், மறுபுறம் கொரோனா பாதித்து உயிர்பலிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நாம் எதிர்பார்க்காத பலர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சோகங்களும் நடந்தேறி விட்டன.

இந்நிலையில், கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் 40 லட்சம் பேர் உயிரிழப்பு என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும், தடுப்பூசி பற்றாக்குறையால் பாதிப்பும், உயிர்பலியும் அதிகரிக்க கூடிய ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.   கொரோனா பாதித்து ஓராண்டில் 20 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 20 லட்சம் பேர் சர்வதேச அளவில் 166 நாட்களில் உயிரிழந்துள்ளதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவருகிறது. இதில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, மெக்சிகோ நாடுகள் உலக அளவில் 50 சதவீத உயிரிழப்புகளை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரேசிலை தொடர் ந்து இந்தியாவும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகளவு கொண்டதாக உள்ளது.

பிரேசிலில் தீவிர சிகிச்சை பிரிவில் 80 சதவீத நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில் ஏற்படும் உயிரிழப்பில் 3ல் ஒருவர் இந்தியாவில் உள்ளனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் பல நாடுகளில் கல்லறை விரிவாக்கம், தகன மேடைகள் அமைத்தல் ஆகிய கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கொரோனா உயிரிழப்புகள் அதிகளவில் இருக்கக்கூடும் என்று கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பு மதிப்பீடு செய்திருந்தது. இதனை சுட்டிக்காட்டி சர்வதேச அளவில் உயிரிழப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் குறைத்து கூறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை சுகாதார நிபுணர்கள் எழுப்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-1000-rains

  சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

 • girlss_saydi

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

 • amesaann11

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

 • marina-sculptures22

  மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

 • 5starrrr

  5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்