SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘இப்படியே பேசிக்கொண்டிருந்தால் பின்னர் வருத்தப்படுவீர்கள்’சேலம் சமூக ஆர்வலருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜனதா துணைதலைவர்: வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோவால் பரபரப்பு

2021-06-19@ 00:47:27

சேலம்:  அண்ணா, கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசிய புகாரின்பேரில் சென்னையை சேர்ந்த கிஷோர் கே.சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இந்நிலையில், பாஜவின் மாநில துணைத்தலைவரும், மாஜி ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, கிஷோர் கே.சாமிக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் அவரது பேஸ்புக் லைவில், அண்ணாமலையை கடுமையாக கண்டித்துள்ளார். சிங்கம் என்ற பட்டத்தை உங்களுக்கு மக்கள் ெகாடுத்தார்களா? இல்லை நீங்களே வைத்துக்கொண்டீர்களா? என பேசியுள்ளார்.
  இந்நிலையில் நேற்று முன்தினம் அண்ணாமலை, பியூசின் வாட்ஸ்அப் காலில் வந்து பேசியுள்ளார். இந்த பேச்சு ஆடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவிவருகிறது.

இதில் பேசும் அண்ணாமலை, என்னை குறித்து எவ்வாறு தவறாக பேசலாம்? நாகரீகமாக பேசத்தெரியாதா? மரியாதையாக சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன். இதே போல பேசிக்கிட்டே இருந்தீர்கள் என்றால் பின்னர் வருத்தப்படக்கூடாது என்று கூறுகிறார்.   இதற்கு பியூஸ், வருத்தப்படுவீர்கள் என்று கூறி என்னை மிரட்டுகிறீர்களா? பெண்களை கொச்சையாக பேசும் ஆசாமிக்கு ஆதரவாக செயல்படுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர்.   இதையடுத்து பியூசுக்கு தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது. தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடாவை சந்தித்து முறையிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்