SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓபிஎஸ் வசிக்கும் மாவட்டத்தில் குடிமராமத்தில் பணம் குவித்த கான்டிராக்டர்கள் கலங்கி போய் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2021-06-18@ 00:28:16

‘‘பிரேக் தி ரூல்ஸ் என்று பாட்டு பாடும் பட்டு நகர புரோக்கர்கள், அரசு அதிகாரிகளை பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம்  மாவட்டத்துல பட்டு நகராட்சியில கவர்மென்ட் அப்ரூவல் பிளாட்டுன்னு சொல்லி, ஏமாந்த மக்களுக்கு ஏராளமாக வித்து இருக்காங்க. பிளாட் வாங்கியாச்சு... வீடு, கடை கட்டணும் இல்லையா... வங்கிக்கு போனா.. இது அப்ரூவல் இல்லை. இதுக்கு லோன் தர முடியாது என்று வங்கிகள் கருணையே இல்லாமல் விரட்டி அடிக்கிறாங்களாம். சரி பட்டு நகராட்சிக்கு போனா... பட்டுனு அப்ரூவல் வாங்கிடலாம்னு நினைச்ச மக்களின் கால்களில் இருந்த ரேகை தேய்ந்தது  தான் மிச்சமாம்... அவர்கள் அலைந்து திரிந்து அவஸ்தை பட்டதுதான் நடந்ததாம். இந்த அப்பாவி மக்களை குறிவைத்த சில புரோக்கர்கள்... அப்ரூவல் என்பது சின்ன பிரச்னை... இதுக்கு எதுக்காக 20 நாளாக அலையறீங்க... இருபதாயிரம் வெட்டுங்க... இரண்டு நாளில் அப்ரூவல் வாங்கிட்டு போங்க... வங்கியில வீடு கட்டி ஜாலியாக இருங்க என்று ஆடு நனையுதேனு ஓநாய் இரக்கப்பட்ட கதையாக போனது... இருந்தாலும் பல லட்சம் கொடுத்து பிளாட் வாங்கியவர்கள் போனால் போகிறது என்று தலையில் அடித்தபடி லஞ்சம் கொடுத்து அப்ரூவல் பிளாட்டை வாங்கிட்டு போறாங்களாம். அப்ரூவல் இல்லாத பிளாட்டை வித்தவனை போய் கேட்டா... அப்ரூவல் இல்லாததால தான் பிளாட்டை குறைந்த ரேட்டுக்கு விற்றேன் என்று லாஜிக்கோட பேசி மிரட்டறாங்களாம். அதனால பட்டு நகராட்சியில ஜனங்க போனா அலைக்கழிப்புதான் மிஞ்சமாம், புரோக்கருங்களுக்கு எந்த ரூல்ஸ்சும் இல்லையாம். இந்த பிளான் அப்ரூவல் மேட்டர்ல அந்த துறையோட பெருமாளின் பெயர் கொண்ட அதிகாரியும், நகரத்தோட உச்ச  அதிகாரியும் கைகோர்த்து வேலை செய்றாங்களாம்...’’ என்று மக்கள் படும் வேதனையை சொன்னார் விக்கியானந்தா.
‘‘தேனி மாவட்ட கான்டிராக்டர்களுக்கு தலைவலி துவங்கி இருக்கிறதாமே, ஏனாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேனி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சாலைகள், அரசுத்துறை கட்டிடங்கள், குடிமராமத்து பணிகளில் பெரும்பாலானவை அங்குள்ள ‘‘மாஜி துணையானவருக்கு’’ நெருக்கமானவர்களே அதிகம் செய்து வந்தனர். ஏற்கனவே கடந்த ஆட்சியின்போது  குடிமராமத்து பணிகளை, போலி விவசாயிகள் சங்கத்தின் பெயரில் இலைக்கட்சியினரே  செய்து வந்தனர். இதனால் பல இடங்களில் பெயரளவிலே பணிகள் நடந்து வந்தன. இப்பணிகளின் தரம் குறித்து ஆய்வு என்பது கண் துடைப்பாகவே இருந்து வந்தது.  கண்மாய் குடிமராமத்து பணிகளிலும் கிணற்றுக்குள் போட்ட கல் போல பல கோடி  ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டாலும், முறையாக பணிகள் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு விவசாயிகள் மத்தியில் இருந்து வருகிறது. இதுகுறித்து கடந்த  காலங்களில் கூறினாலும், ‘‘மாஜி துணையானவருக்கு’’ வேண்டியவர்கள் என்பதால்  தீர்வு இருக்காது என விவசாயிகள் மவுனமாக இருந்து வந்தனர். தற்போது ஆட்சி மாற்றம் காரணமாக, ஆய்வு நடத்தினால் முறைகேடுகளை விவரிக்க விவசாயிகள்  வரிந்து கட்டி வருகின்றனராம். இதுதொடர்பாக புகாரளிக்கவும் தயாராக உள்ளனராம்... இதனால் ஜால்ரா போட்டே கோடிகளை குவித்தவர்கள் கலங்கி போயிருக்கின்றனராம்... புதுசா என்ன தலைவலி எந்த ரூபத்தில் வரப்போகுதோ என்றபடி உட்கார்ந்து இருக்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பவுனு பவுனுதான்... என்று பாட்டு பாடியபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘என் கிட்ட சவரன் மேட்டரும் இல்ல... பவுனு மேட்டரும் இல்ல. ஆனால் பவுனுவின் தம்பி மேட்டர் சொல்றேன் கேளு.. புதிதாக உதயமான மாவட்டத்தில் இலை கட்சி செயலாளராக உள்ளவர் ராஜமானவர். கடந்த இலை ஆட்சியில் இரண்டுமுறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்த இவர் தனது சகோதரர்  சேகரானவர் பெயரில் பல்வேறு துறைகளில் கோடிக்கணக்கில் ஒப்பந்தம் எடுத்து அதற்கான பணிகளை செய்து வந்துள்ளார். ஆறு, வாய்க்காலில் வேலை நடந்தால் அதற்கான மணலை அதே ஆற்றில் எடுத்து வேலை செய்வது அவரது வாடிக்கையாம்... அத்துடன் வேறு வேலைக்கு மணல் தேவை என்றாலும் ஆற்றிலிருந்து மணலை  தன்னிச்சையாக அள்ளிச்செல்வாராம்... அவரை யாராவது தடுத்தால் காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுத்து மிரட்டுவாராம். இலை ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த சேகரானவர் ஆட்சி மாற்றத்திலும் ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்த பணிகளைதொடர்ந்து செய்து  வருகிறாராம்... தற்போது நடைபெறும் சாலைப்பணிகளுக்காக ஏற்கனவே ஆற்றிலிருந்து எடுத்து பதுக்கி வைத்திருந்த மணலை ஏற்றி செல்வதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் லாரிகளுடன் சேகரானவர் வந்துள்ளார். அப்போது கிராம மக்கள்  மணல் லாரியை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்து விட்டனர். 2 நாட்களுக்கு  முன் அதிகாலையில் லாரியில் செம்மண்ணுடன் சென்ற சேகரானவர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மணல் மீது செம்மண்ணை போட்டு அதை பொக்லின் இயந்திரம்  மூலம் கலக்கி அள்ள முயற்சித்தாராம்... தகவல் தெரிந்த பாடகசேகரி கிராம  மக்கள் ஒன்று திரண்டு பொக்லின் இயந்திரம் மற்றும் லாரியை சிறை பிடித்தனர். பின்னர் பொக்லின் இயந்திரம் மற்றும் லாரியை சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில்  ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பாலையூர் போலீசார் விஏஓவிடம் புகார் பெற்றுக்கொண்டு இலைகட்சி மாஜி எம்எல்ஏவின் தம்பி சேகரானவர் மீது திருட்டு வழக்கு, சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை சட்டம் உட்பட 3 பிரிவுகளின்கீழ்  எப்ஐஆர் போடப்பட்டுள்ளதாம்... எப்ஐஆர் போடப்பட்ட தகவல் சேகரானவருக்கு தெரிய வந்ததால் எந்தநேரத்திலும் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் மாவட்டத்தை விட்டு தலைமறைவாகி விட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

 • plastic-vaste-girl

  கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

 • farmeee112

  "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

 • arjennn11

  திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்