ஆழ்வார்பேட்டை, நந்தனம், லாயிட்ஸ் காலனி உள்ளிட்ட 6 ரேஷன் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு; பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகை 2,000 வழங்கினார்
2021-06-17@ 00:12:42

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக 2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் நேற்று 2வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனம், லாயிட்ஸ் காலனி பகுதிகளில் உள்ள 6 ரேஷன் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திடீரென ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் பிறந்த நாளில் 4000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும், கொரோனா நிவாரண தொகை முதல் தவணையாக 2000 கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. 2வது நாளாக நேற்று அனைத்து ரேஷன் கடைகளிலும் தலா 2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் புறப்பட்டார். அப்போது திடீரென ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ரேஷன் கடை அருகே, தனது காரை நிறுத்தி, அந்த ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது அங்கு நிவாரண பொருட்கள் வாங்க வந்தவர்கள் முதல்வரை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரேஷன் கடைக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வரிசையில் நின்ற பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகையான 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை அவரே வழங்கினார். பின்னர், ரேஷன் கடையில் இதுவரை நிவாரண பொருட்கள் வாங்கி சென்றவர்களின் பட்டியல் அடங்கிய பதிவேட்டை ஆய்வு செய்தார். ரேஷன் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி பொருட்களை வழங்கி, சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களிடம் வணக்கம் கூறிவிட்டு, மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அப்போது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல், நேற்று காலை திடீரென ஆழ்வார்பேட்டை ரேஷன் கடையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர். இதைத்தொடர்ந்து சென்னை, நந்தனம் மற்றும் லாயிட்ஸ் காலனி பகுதி என மொத்தம் 6 ரேஷன் கடைகளில் முதல்வர் நேற்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகை 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை வழங்கினார்.
மேலும் செய்திகள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிரிழப்பு; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,658 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
சென்னையில் ஜூலை 8-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு வளரவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விபரீதம்; மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
கூடுவாஞ்சேரி அருகே மறியல் போராட்டத்தால் பரபரப்பு, டாரஸ் லாரி மோதி பெண் பலி; 30 அடி தூரத்துக்கு இழுத்து சென்ற அவலம்
தந்தை நினைவாக வைத்திருந்த வைரக்கல் பதித்த ரூ1.50 லட்சம் மதிப்புள்ள தங்கப்பேனா திருட்டு: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!