SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைதிகளுடன் தொலைபேசி, வாட்ஸ் அப்பில் வக்கீல்கள் பேச அனுமதி கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

2021-06-16@ 01:12:22

சென்னை: சிறைக் கைதிகளுடன் தொலைப்பேசி அல்லது காணொலி காட்சி மூலம் வழக்கறிஞர்கள் பேச அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளிடம் தொலைப்பேசி அல்லது காணொலி மூலம் வழக்கறிஞர்கள் பேச அனுமதிக்க கோரி கே.ஆர்.ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, இதேபோன்று சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் வைத்த கோரிக்கை பரிசீலிக்க உத்தரவிடப்பட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசும், சிறைத் துறையும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டதுடன், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டு வழக்கை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

  • sand-storm-china

    அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

  • plastic-vaste-girl

    கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

  • farmeee112

    "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

  • arjennn11

    திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்