SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விரைவில் அரசு பள்ளி திறக்க இருப்பதால் பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணி துவங்கியது: அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரம்

2021-06-16@ 01:08:27

சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்களை வினியோகம் செய்யும் பணி 27 மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் தற்போது  கொரோனா பரவல்  குறையத் தொடங்கியதை அடுத்து, பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்னதாக, 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் மதிப்பீடு செய்யும் பணிக்காக  14ம் தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவித்ததால், நேற்று முன்தினம் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்தனர்.

இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் கடந்த 7ம் தேதி வெளியிட்டு இருந்தார். அதன்படி நேற்று முன்தினம் 27 மாவட்டங்களில் உள்ள மேனிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தொடக்க மற்றும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 1, 6, 9ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இந்த பணிகளை செய்யவும், பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகளை செய்யவும் ஒரு பகுதி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இலவசப் பாடப்புத்தகங்கள் அங்கிருந்து பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியும் நேற்று தொடங்கியது. 27 மாவட்டங்களில் மட்டும் இந்த பணி நேற்று தொடங்கியது. இந்த புத்தகங்கள் பற்றி திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு அளிக்கப்படும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

  • sand-storm-china

    அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

  • plastic-vaste-girl

    கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

  • farmeee112

    "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

  • arjennn11

    திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்