SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’’: புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: கழிவுநீர் குழாய் உடைப்பு பழுதுநீக்கம்: முதல்வருக்கு பொதுமக்கள் பாராட்டு

2021-06-15@ 20:17:40

அண்ணா நகர்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்பாக பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு, முதல்வருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். தமிழக அரசால் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை மக்களின் குறைகளை  தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது பெறப்பட்ட மனுக்கள் தற்போது வலைத்தளத்தில் பதிவேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும்,  மக்களிடம் புகார்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா நகர், அமைந்தகரை பகுதியில் இருந்து குடிநீர் குழாயில் சாக்கடை தண்ணீர் கலப்பது , சாக்கடை அடைப்பு  உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து புகார் மனுக்கள் சென்னை குடிநீர் வாரிய 100 வார்டு அலுவலத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த புகார்களின் மீது,  சென்னை அண்ணா நகர் 8வது மண்ட ல குடிநீர் வாரிய பொறியாளர் சுரேஷ்குமார் தலைமையில் ஊழியர்கள் குழுவாக பிரிந்து பகுதியில் உள்ள  பணிகளை தீவிரமாக சரி செய்து வருகின்றனர்.  அமைந்தகரையில் கழிவுநீர் குழாய் பழுதடைந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை  சரி செய்தனர். இவ்வாறு ஒவ்வொரு புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெறுவதைப் பார்க்கும் பொதுமக்கள்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  நன்றிகளை தெரிவித்துள்ளனர். அதேபோல் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் வாயிலாக பெற்ற புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், கட்சி பாகுபாடு இல்லாமல் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுத்து வரும் முதல்வரின் செயல்பாடு வரவேற்கத்தக்கதாக உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்