SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை தெற்கு தொகுதியில் ‘தன லாபம்’ என சுவரில் எழுதி பாஜ எம்எல்ஏ அலுவலகம் திறப்பு: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

2021-06-15@ 04:05:18

கோவை: கோவை தெற்கு தொகுதியில் ‘தன லாபம்’ என சுவரில் எழுதி  பாஜ எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜ சார்பில், அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இத்தொகுதிக்கான எம்எல்ஏ அலுவலகம், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே உள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. வானதி சீனிவாசன் எம்எல்ஏ மற்றும் அவரது கணவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, எம்எல்ஏ அறையின் சுவரில் ‘ தன லாபம்’ என மஞ்சளில் எழுதி வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் திறப்பு விழாவின்போது ‘தன லாபம்’ என எழுதி திறப்பு விழா நடப்பது போன்று இவ்விழா நடந்தது. இந்த காட்சி, வழக்கத்துக்கு மாறாக இருந்ததால், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்