SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனக்கென தனியாக அரசியல் தளபதியை நியமிக்க துடிக்கும் இலை விவிஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-06-15@ 03:59:36

‘‘கல்லூரிகளில் ஆண்டுக்கு ஆண்டு புது புது கோர்ஸ் வருவதை கேள்விப்பட்டு இருக்கோம்... ஆனா புதுபுது ஊழல்கள் வருவதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ தமிழகத்தில்  கடந்த பத்து வருசமா ஊழல் நடக்காத டிபார்ட்மெண்ட்டே இல்லன்னு சொல்லும்  அளவுக்கு எல்லா இடத்திலேயும் அதிகாரிகள் துணையோடு அமைச்சர்களும், அமைச்சரின் கருணையோடு அதிகாரிகளும் தங்கள் வீட்டு கல்லாவை நிரப்பி இருக்காங்களாம்.  குறிப்பாக கல்வித் துறையில் இது அளவுக்கு அதிகமாகவே இருந்துள்தாம். பல  யுனிவர்சிட்டிகளில், தகுதியே இல்லாத பலருக்கு இஷ்டத்துக்கும் போஸ்டிங்  போட்டு பையை நிரப்பியிருக்காங்க. முந்தைய ஆளும் கட்சியின் ஆசியோடு நடந்த  இந்த விவகாரம், இப்போ பூதாகரமாக கிளம்பியிருக்காம். ஐஏஎஸ் அதிகாரி தலைமையில  விசாரணை கமிஷன் போடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர்  அறிவிச்சிருக்கும் அளவுக்கு வந்திருக்காம். இத கொஞ்சமும் எதிர்பாராத  சம்பந்தப்பட்ட யுனிவர்சிட்டிகள்ல வேலை பார்த்த பெருந்தலைகள், பயங்கர கிலியில  இருக்காங்களாம். போஸ்டிங்ல ஆரம்பிச்சு, கொள்முதல், கட்டமைப்பு வசதினு  எல்லாத்துலையும் கை வச்சிருக்கோம். இப்படி திடீர்னு ஐஏஎஸ் அதிகாரி  விசாரணைனு சொன்னா எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலனு புலம்பி தவிக்குறாங்களாம்.  இதனால அந்த காலகட்டத்துல பொறுப்புல இருந்த அதிகாரிகள் எல்லோரும் ஒண்ணு  சேர்ந்து, எப்படி தப்பிக்கலாம்னு ரூம் போட்டு யோசிக்கிறாங்களாம்... பழைய பைல்களை மறைப்பது, எரிப்பது... கம்ப்யூட்டரில் உள்ள ஆவணங்களை அழிப்பது என்று புது புது வேலைகளில் இறங்கி இருக்காங்களாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அரசன் என்றால் குடிமக்களும், தளபதியும், படைகளும் முக்கியம்... இது இல்லாதவன் சாதாரண குடிமகன் என்ற வரலாற்றை நன்றாக புரிந்து வைத்துக் கொண்டுள்ளார் மாங்கனி மாவட்ட தமிழகத்தின் மாஜி விவிஐபி... அதற்காக தன் அடிப்பொடி ஒருவரை முக்கிய பதவிக்கு கொண்டு வர முயற்சி செய்கிறாராமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி  மாஜி, புல் பவர்ல இருந்தபோது சிரிச்சாலும் நடந்தாலும் செய்தியாக  வந்திச்சு. இதனால எதைப்பற்றியும் சிந்திக்கல, யாரைப்பற்றியும் கண்டுக்கல.  ஆனால், இப்போது மாவட்டத்துல 7 எம்எல்ஏக்கள் இருந்தும், தனக்கு ஜால்ரா அடிக்கிற மாதிரியும்.. நல்ல விஷயம் தெரிந்த நபர் இல்லாததாலும் தள்ளாடி வருகிறார்களாம். இதனால அரசின் அறிக்கைக்கு பதில்  கொடுத்துக்கிட்டு இருக்க முடியாம தடுமாற்றம் ஏற்பட்டிருக்காம். அதே  நேரத்துல கட்சியில் சீனியராகவும், வானளாவிய அதிகாரப்பதவியிலும் இருந்த  ரெண்டு பேரு இந்த மாவட்டத்துல இருக்காங்களாம். அவர்களை மாஜி கண்டு கொள்வதே  இல்லையாம். இதில் ஒருத்தரை தேனிக்காரரு, எதிர்க்கட்சி பதவிக்கு பரிந்துரை  செய்ததும், அதற்கு எந்த ரியாக்‌ஷனும் கொடுக்காமல் சம்மதம் போல் இருந்ததும்  சர்ச்சையை கிளப்பிச்சு. இந்த விவகாரத்தில் மாஜிக்கு அவருமேல செம  கடுப்பாம். இதனால தெற்கு தொகுதியில் புதுசா ஜெயிச்ச எம்எல்ஏ ஒருத்தரை, தனது ஆளாக தயார் படுத்திக்கிட்டு இருக்காராம். இவரு தலைமையிலதான்,  சமீபத்தில் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் இணைந்து பிரஸ்மீட்  கொடுத்தாங்களாம். அந்த பிரஸ்மீட்டிலும் சீனியர் மாஜி ஒருவர் புகுந்து  குழப்பிவிட்டாராம். இதுவும் மாஜியின் கவனத்துக்கு போனதால், தனக்கான தளபதியை  மேலே கொண்டு வர பட்டை தீட்டிக்கிட்டிருக்காராம்... போஸ்டிங் வாங்குனவங்களும், நம்மளோட வேலை தப்புமான்னு தெரியாம விழிபிதுங்கி போயிருக்காங்களாம்.. இருந்தாலும் தனக்கு பதில் அரசுக்கு பதிலடி கொடுக்க தளபதியை பட்டை தீட்டி வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘செல்போன், டெலிபோனை எடுக்க வெயிலூர் இலை கட்சி நிர்வாகிகள் பயப்படுகிறார்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில்  சட்டமன்ற பொதுத்தேர்தலில் இலை கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு, அக்கட்சியின் இரட்டையர்கள் தான் காரணம் ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினரும் கூட்டணி கட்சியான  தாமரை, மாங்கனி தான் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதை பயன்படுத்திக்  கொண்ட சின்ன மம்மி ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த இலையின் முக்கிய நிர்வாகிகளை  போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தை  சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளரான, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளரிடம்  பேசினார். அப்போது கட்சி யாரிடம் உள்ளது என்றே தெரியவில்லை. மாவட்ட  செயலாளர், அமைச்சர் யாருமே நிர்வாகிகளை மதிப்பதில்லை. மரியாதை  கொடுப்பதில்லை என்று அந்த நிர்வாகி குமுறினார். உடனே அதையெல்லாம் நான்  பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அந்த நிர்வாகி  உட்பட சின்ன மம்மியுடன் போனில் பேசிய அனைத்து நிர்வாகிகளையும் கட்சி தலைமை  நீக்கியது.
இதனால் அதிமுக முக்கிய நிர்வாகிகள் அலறலில் இருந்து  வருகின்றனர். சசிகலா அடுத்து யாருக்கு போன் போட்டு நலம் விசாரிப்பாரோ  என்று தெரியவில்லையே. குறிப்பாக மாநில அளவில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள்  மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு போன் போட்டால் நாம் என்ன செய்வது என்று  தெரியாமல் இலை நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். சின்ன மம்மியுடன் முன்பு  ெநருக்கமாக இருந்த நிர்வாகிகளின் பட்டியலை வைத்துக் கொண்டு தான் அவர் ஒவ்வொருவரையும் போனில் அழைத்து பேசிவருகிறாராம். இதனால் என்ன செய்வது என்று  தெரியாமல் பதற்றத்துடன் இருந்து வருகின்றனர் இலையின் மூத்த நிர்வாகிகள். இதுதான் செல்போனில் பேச பயப்படுவதாக சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

 • plastic-vaste-girl

  கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

 • farmeee112

  "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

 • arjennn11

  திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்