SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்திற்கு முன் மேலாடையின்றி ‘போஸ்’ கொடுத்த ஆபாச நடிகை கொலை: அமெரிக்காவில் ரசிகர்கள் கவலை

2021-06-14@ 19:00:12

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்திற்கு முன் மேலாடையின்றி போஸ் கொடுத்த ஆபாச நடிகை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த நடிகை லாரன் ஸ்காட் (27) என்கிற டகோடா ஸ்கை, ஏராளமான ஆபாச படங்களில் நடித்து வந்தார். அமெரிக்காவின் ஆபாச பட உலகில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில், மர்மமான முறையில் அவரது வீட்டில் டகோடா ஸ்கை உயிரிழந்தார். வெளியே சென்றிருந்த கணவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மனைவி டகோடா ஸ்கை மர்மமாக இறந்து கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அவர்கள், சம்பவ இடத்துக்கு வந்து டகோடாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபாச நடிகை டகோடா மர்மமான கொலையான சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆபாச நடிகையின் மரணத்தின் முதற்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், ‘கடந்தாண்டு மே 25ம் தேதி மினியாபோலிஸ் போலீஸ் அதிகாரி ஒருவர், கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்டு என்பவரை தனது முட்டியால் நசுக்கிக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கும் டகோடா ஸ்கை சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளது. கடந்த மே 4ம் தேதி சுவரில் வரையப்பட்டிருந்த ஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்திற்கு முன், டகோடா தனது மேலாடையை கழற்றிவிட்டு ஒய்யாரமாக நடந்து  சென்றார்.

போதாக் குறைக்கு, மேலாடை இல்லாமல் இருந்த ஆபாச புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டார். ஜார்ஜ் ஃபிளாய்டை அவமதித்துவிட்டதாக கூறி, ஏகப்பட்ட நெட்டிசன்கள் அவரது செயலை கண்டித்து இருந்தனர். மதுப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையான டகோடா ஸ்கையை, ஜார்ஜ் ஃபிளாய்டை ஆதரிக்கும் நபர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது தெரியவருகிறது. ஆனால், அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது இன்னமும் விசாரணை நிலையிலேயே உள்ளது. அதேநேரம் டகோடாவின் அத்தை போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் டகோடாவின் தாத்தா மற்றும் பாட்டி கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் இறந்தார்கள்.

அதன் பின்னர் மிகுந்த மன உளைச்சலுக்கு அவர் ஆளாகி இருந்தார். அடிக்கடி தனக்கு அமானுஷ்ய சத்தங்கள் கேட்பதாகவும், சில சமயங்களில் அவற்றுடன் பேசி வந்ததாகவும் கூறியுள்ளார்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

 • plastic-vaste-girl

  கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

 • farmeee112

  "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

 • arjennn11

  திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்