நிர்வாக தலைநகரான விசாகப்பட்டினம் செல்ல சித்தூரில் இருந்து திருப்பதி வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும்-மத்திய அமைச்சரிடம் எம்பி மனு
2021-06-14@ 12:31:53

திருப்பதி : நிர்வாக தலைநகரான விசாகப்பட்டினம் செல்ல சித்தூரில் இருந்து திருப்பதி வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் எம்பி கோரிக்கை மனு அளித்தார்.திருப்பதிக்கு நேற்று வருகை தந்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை எம்பி குருமூர்த்தி நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பதி தொகுதிக்கு உட்பட்ட ரயில் நிலைய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க நிதி ஒதுக்க வேண்டும். அதிநவீன வசதிகள் கொண்ட ரயில் நிலையத்தை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். இதன் மூலம் பயணிகள் வசதி மேம்படும். திருப்பதி, காளஹஸ்தி, கூடூர், வெங்கடகிரி, நாயுடுபேட்டை, வெங்கடாசலம் ரயில் நிலையங்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆந்திர மாநில நிர்வாக தலைநகரான விசாகப்பட்டினம் செல்ல வசதியாக சித்தூரில் இருந்து திருப்பதி வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும். திருப்பதியில் பாலாஜி ரயில்வே மண்டல கோட்டம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்று கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்
ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு
ஸ்டீல், ஜவுளி அதிபர் வீடுகளில் சோதனை ரூ.56 கோடி, 32 கிலோ தங்கம் ரூ.390 கோடி சொத்து பறிமுதல்: 13 மணி நேரம் பணத்தை எண்ணிய அதிகாரிகள்
இயல்பு வாழ்க்கை பாதிப்பு இமாச்சலில் மேகவெடிப்பு நிலச்சரிவில் 2 பெண் பலி
விமானத்தில் சிகரெட் பிடித்த பாடி பில்டர்: விசாரணைக்கு உத்தரவு
தண்ணீர் போன்ற குழம்பு வெந்தும் வேகாத ரொட்டி: உபி போலீஸ்காரர் கதறல்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!