SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு உங்க பக்கம் என்று சின்ன மம்மிக்கு உறுதி கொடுத்த முன்னாள் எம்.பி. பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-06-14@ 01:24:43

‘‘கரன்சியால் 400 லிட்டர் கள்ளச்சாராயத்தை மறைய செய்த மூன்று ஸ்டார் காக்கியின் மாயா ஜாலத்தை பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் போலீசார் சமீபத்தில் வாகன சோதனை நடத்தி, கள்ளச்சாராய பாட்டிலுடன் 24 வயது வாலிபரை ‘லபக்கினர். அவரிடம் விசாரித்தபோது, சுல்தான்பேட்டை தோட்டத்தில் இருந்து வாங்கியதாக கூறினார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் அந்த நபரை அழைத்துக்கொண்டு, அந்த தோட்டத்துக்கு சென்றார். அங்கு, கள்ளச்சாராயம் காய்ச்சுவது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், அந்த இடம், சூலூர் காவல் எல்லையாம். கைதும் செய்ய முடியாது... நடவடிக்கையும் எடுக்க முடியாது. காரணம், இந்தியா-பாகிஸ்தான் பார்டர் போல பிரச்னை வந்துவிடப்போகுதோ என்ற பயம்தான் காரணமாம். இதனால, பிடிபட்ட நபரை சூலூர் போலீசார் வசம்  ஒப்படைத்தார். கள்ளச்சாராயம் காய்ச்சும் தகவலையும், சூலூர் காவல் ஆய்வாளருக்கு தெரியப்படுத்தினார். அதையடுத்து, படையுடன் வந்த சூலூர் காவல் ஆய்வாளர். கள்ளச்சாராயம் காய்ச்சும்  நபர், இவருக்கு நன்குஅறிமுகமானவர் என்பதால் சில நொடி அமைதிகாத்தாராம். உடன் சக போலீசார் வந்திருப்பதால்  இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால், சாராய ஊறல்களை அழிப்பதுபோல் நடித்து, 400 லிட்டர் அளவிலான சாராய ஊறல்களை மட்டும் அழித்தார். மீதமுள்ளவற்றை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். வழக்குப்பதிவின்போது, 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டதை, ஏற்கனவே வாங்கிய கரன்சிக்காக கணக்கில் காட்டாமல் ஆவணத்தில் மறைத்துவிட்டாராம். பிடிப்பட்ட அப்பாவியை பிடித்து, ஒரு லிட்டர் சாராய பாட்டிலுடன் கைது செய்ததாக வழக்கை முடித்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிரிமலை மாவட்டத்துல சிலர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டம் வந்தவாசி வட்டாரத்துல, 6 பிரைமரி ஹெல்த் சென்டர் இருக்குது.  இதுல வழூர்ல இருக்குற டெவலப்டு ஹெல்த் சென்டர்ல 8 ஆண்டா, பெயருக்கு முன்னாள மிஸ்டரை கொண்ட 4 எழுத்து பெயர்காரர் பணிபுரிந்து வர்றாரு. மற்ற வட்டாரங்களை காட்டிலும் வந்தவாசி வட்டாரத்துல, ஹெல்த் டிப்பார்ட்மென்ட்ல இவரு சிறப்பா பணியாற்றுவாராம். இதனால மாவட்ட நிர்வாகம் அவருக்கு எந்தவித இடையூறும்  செய்யலையாம். ஆனாலும், அவர் தொடர்ந்து ஒரே இடத்துல பணியாற்றுவதால அவரோட, இடத்துக்கு வர வந்தவாசி பகுதியைச் சேர்ந்த ஆனந்தமான மருத்துவர் ஒருவர் ரொம்ப முயற்சி செஞ்சிருக்காரு. இதுக்காக, மிஸ்டர் 4 எழுத்து பெயர் கொண்ட மருத்துவர் மீது மொட்ட பெட்டிஷனும் போட்டிருக்காரு. விசாரணையில  மொட்ட பெட்டிஷன் மேட்டர் உண்மை இல்லைன்னு தெரிஞ்சதாலே அவரை மாவட்ட நிர்வாகம் பணியிடமாற்றம் செய்யலையாம். ஆனால், கடந்த கொரோனா முதல் அலையில்  மிஸ்டர் 4 எழுத்து பெயர்காரருக்கு தொற்று ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு போயிருக்காரு.  இதனால அவராகவே, இப்ப செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விருப்ப மாற்றம் கேட்டிருக்காராம். இதை தெரிஞ்சுகிட்டு, ஆனந்தமான மருத்துவர் அந்த இடத்திற்கு வர்றதுக்கு மீண்டும் பல முயற்சிகள செஞ்சி வர்றாராம். ஏற்கனவே இவர் வந்தவாசி ஜீஎச்ல பணியாற்றினாராம். இப்ப வட்டார மருத்துவ அலுவலர் பதவி வாங்குறதுக்கு வழூர் பிரைமரி ஹெல்த் சென்டருக்கு பணியிடமாற்றமாகி வந்திருக்காராம். எப்படியாவது வட்டார மருத்துவ அலுவலரா ஆகிட்டா.. டவுன்ல இருக்குற அவர் கிளீனிக்கையும் சேர்த்து பாத்துக்கலாம்னு நினைக்கிறாராம். இதனாலத்தான் வழூர் வட்டார மருத்துவ அலுவலர் பதவிக்காக இந்த துடி  துடிக்கிறாராம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கலாம்னு பாக்குறாராம். ஆனா, அங்க இருக்குற மருத்துவ ஊழியருங்க, நல்ல நேர்மையான அதிகாரி வந்தா நல்லா இருக்குமேன்னு பீல் பண்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சின்ன மம்மி பின்னாடி ஈரோடே அணி வகுக்கும்.. நீங்க சீக்கிரம் களத்துக்கு வாங்கனு தைரியமான அழைப்பு விடுத்தும், சேலம்காரரை வறுத்தெடுத்த விஷயத்தை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை நலம் விசாரிப்பு என்ற பெயரில் சின்ன மம்மி செல்போனில் பேசுகிறார். அப்போது கொரோனா காலம் பத்திரமாக இருங்க என்று சொல்கிறார். அதன் பின்னர் அரசியல் அஸ்திரத்தை கையில் எடுத்து சேலம், தேனி விஐபிகளுக்கு ஷாக் கொடுக்கிறார். இதுவரை பலரிடம் பேசியதில் ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ஸ்மால் காட் என்ற பெயரை கொண்ட முன்னாள் எம்பி ஒருத்தர்... சேலம் காரருக்கு உட்காா்ந்து யோசித்து பதவி கொடுத்தீங்க.. அதை அவர் நினைத்து பார்க்கவில்லை. உங்க தலைமையில இயங்க நாங்க தயாரா இருக்கோம். இதற்காக ஈரோடு மாவட்டத்தையே உங்கள் பின்னாடி வரும்படி ரெடி செய்யறோம் என்ற உறுதி அளித்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நாடகம் முடிஞ்சு போச்சு... கூட்டம் கலைந்து போச்சு... விட்டத்தை பார்த்து விரக்தியில் இருக்கும் மாஜிக்களை பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மதுரை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர், தெர்மோகோல்காரர், பிரச்னைக்குரிய பாரத்நெட்காரர், செல்லமான அப்பா என மூவரும் மும்மூர்த்திகளாக கடந்த ஆட்சி காலத்தில் கலக்கிக் கொண்டிருந்தனர். இவர்களை சுற்றி, எப்போதும் இலையின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என படை, பரிவாரங்கள் வந்து கொண்டே இருந்தனர். அவர்கள் எங்கு சென்றாலும், காரில் பின்தொடர்ந்து வந்தனர். அவர்களுக்கு வைட்டமின் ‘‘ப’’வும் தேவையான அளவுக்கு சென்று சேர்ந்து கொண்டிருந்தது. இந்த கூட்டம், எப்போதும் நிரந்தரமாக இருக்கும் என அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். தேர்தல் முடிவுக்கு பின்னர், ஆட்சி மாற்றத்தால், அமைச்சர் பதவி பறிபோனது. தற்போது மூவரும் எம்எல்ஏக்களாக மட்டும் உள்ளனர். இவர்களை தேடியோ, உதவி கேட்டோ கட்சி தொண்டர்களும், முக்கிய பிரமுகர்கள் எட்டிக் கூடப் பார்ப்பதில்லையாம். இதனால், வெறுப்புடன் இவர்கள் வீடு, கட்சி அலுவலத்தில் விட்டத்தை பார்த்து உட்கார்ந்து இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

 • plastic-vaste-girl

  கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

 • farmeee112

  "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

 • arjennn11

  திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்