SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்கள் விடுதியில் 2 சிறுமிகள் பலாத்காரம்: 11 பேர் கொண்ட குழு விசாரணை

2021-06-12@ 18:33:32

ஜாம்ஷெட்பூர்: ஜாம்ஷெட்பூரில் உள்ள பெண்கள் விடுதியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து 11 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அடுத்த டெல்கோ காவல் நிலைய பகுதியில் மதர் தெரசா அறக்கட்டளையின் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்குள்ள இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்க ஆளானதாக புகார் எழுந்தது. அதையடுத்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த 11 பேர் கொண்ட குழுவை ஜாம்ஷெட்பூர் துணை ஆணையர் சூரஜ் குமார் அமைத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘பாலியல் புகார் வந்ததால் விடுதியில் தங்கியிருந்த 40 சிறுமிகள் மற்றும் பெண்கள் ‘பால் கல்யாண் ஆசிரமம்’ என்ற மற்றொரு இடத்தில் தங்கவைத்துள்ளோம். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அறக்கட்டளையின் இயக்குநருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் தலைமறைவாக உள்ளார். மாவட்டத்தின் குழந்தைகள் நலக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்