SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நில அபகரிப்பு புகார் எதிரொலி: தெலங்கானா எம்எல்ஏ ராஜினாமா

2021-06-12@ 17:13:17

ஐதராபாத்: தெலங்கானா ராஷ்டிரிய சமதி கட்சி மூத்த தலைவரும், மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான எட்டாலா ராஜேந்தர், தனது எம்எல்ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் எட்டாலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புகாரை விசாரிக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்ட நிலையில், அவர் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அதற்கான கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவரிடம் இன்று தரவுள்ளதாகவும் அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அவர் விரைவில் டெல்லி சென்று பாஜக தலைவர்கள் முன்னிலையில், அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்