தலைமை பொறுப்பை பணிவுடன் ஏற்கிறேன்... தவான் நெகிழ்ச்சி
2021-06-12@ 01:33:33

மும்பை: இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பொறுப்பை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறேன் என்று ஷிகர் தவான் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஜூலை மாதம் இலங்கையுடன் மோதவுள்ள தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்தது. கேப்டனாக ஷிகர் தவான், யிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பு ஏற்கின்றனர். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே 2 முறை வாய்ப்பு கிடைத்தும் காயம், உடல்தகுதி காரணமாக ஆடும் அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. இந்த முறை சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மற்றொரு தமிழக வீரர் சாய் கிஷோர் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்டு இருக்கிறார். கேப்டனாக பொறுப்பேற்பது குறித்து தவான் பதிந்துள்ள ட்விட்டர் தகவலில், ‘தேசிய அணிக்கு தலைமையேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. இந்த பொறுப்பை பணிவுடன் ஏற்கிறேன். வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’ என கூறியுள்ளார்.
இந்திய அணி: தவான் (கேப்டன்), புவனேஷ்வர் (துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷண் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), யஜ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேதன் சகாரியா.
Tags:
I humbly accept leadership responsibility Dhawan Flexibility தலைமை பொறுப்பை பணிவுடன் ஏற்கிறேன் தவான் நெகிழ்ச்சிமேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி.! 6 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஆர்ச்சர்
மகளிர் டி 20 இறுதி போட்டி; இந்தியா தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
பறந்து வந்த பந்தை பாய்ந்து பிடித்த சூர்யகுமார்
சுப்மன் கில் தில்லான ஆட்டத்தால் நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா; அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!