SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்

2021-06-11@ 12:56:31

டெல்லி: வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான கிழக்கு இந்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்தியப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு பகுதிகளில் அதி கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. ஒடிசா, சத்தீஸ்கார், மத்திய பிரதேசம், மராட்டிய மாநிலத்தின் விதர்பா பகுதியில், அதி கனமழை பெய்யக்கூடும். 


வங்ககடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க வங்க கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழக பகுதிகளில் மழை கிடைக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது. வடக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்