SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்களில் வீக்கம்..வாயில் நுரை!: நெல்லையில் செம்மறி ஆடுகளை தாக்கும் மர்ம நோய்...10 நாட்களில் 200 ஆடுகள் பலி..!!

2021-06-11@ 11:21:22

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மர்ம நோயால் செம்மறி ஆடுகள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பதால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக செம்மறி ஆடுகளை அதிகளவில் வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக செம்மறி ஆடுகள் கண்களில் வீக்கம், வாயில் நுரை தள்ளிய நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகின்றன. 


அம்மை நோய் தாக்கி இருப்பதாக கருதி கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து கால்நடைகளுக்கு ஊசி செலுத்தியதாக விவசாயிகள் கூறியுள்ளனர். எனினும் கடந்த 10 நாட்களில் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துவிட்டதாக அவர்கள் வேதனையுடன் கூறினர். நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் உள்ள மருதகளம், மூளைக்கறைப்பட்டி, முனிஞ்சிப்பட்டி, பருத்திப்பாடு, ரெங்கசமூத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாகவும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். 


ஒவ்வொரு விவசாயியும் 75 முதல் 1000 ஆடுகள் வரை தோட்டங்களில் கிடை அமைத்து வளர்த்து வருகிறார்கள். ஒவ்வொரு கிடையிலும் தினமும் 10 ஆடுகள் வரை நோய் தாக்குதலால் உயிரிழப்பதாக கூறியுள்ள அவர்கள், பாதிக்கப்பட்ட ஆடுகளை தனிமைப்படுத்தி வைத்திருந்தாலும் பிற ஆடுகளுக்கும் நோய் பரவுவதாக தெரிவித்தனர். 


கடந்த 35 ஆண்டுகளில் இதுபோன்ற அடுத்தடுத்த ஆடுகள் உயிரிழப்பை சந்தித்தது இல்லை என்று தெரிவித்துள்ளனர். இது கொரோனா நோய் தாக்கமாக இருக்கலாம் என்று அச்சம் நிலவுவதாக கூறியுள்ள அவர்கள், தமிழ்நாடு அரசு சிகிச்சை உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்