SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளியே சொல்லாதே என மத்திய அரசு உத்தரவிட்டாலும் தடுப்பூசி குறித்த உண்மை நிலையை மக்களிடம் கூறுவோம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

2021-06-11@ 02:26:55

* ரெம்டெசிவிர் மருந்துக்கு ஆரம்பத்தில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
* முதல்வர் நடவடிக்கையால் தற்போது, அந்த மருந்து 9.50லட்சம் வாங்கப்பட்டுள்ளது.
* தடுப்பூசி கையிருப்பு பற்றி பொதுவில் கூறக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
* இதுவரை தமிழகத்துக்கு 1 கோடியே1 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசி வந்துள்ளது.
* மக்களிடம் கூறாமல் இருக்க முடியாது. தடுப்பூசி போடவில்லை என வதந்தி கிளம்பி விடுகிறது.

சென்னை: தடுப்பூசி கையிருப்பு நிலை குறித்த ரகசியங்களை வெளியே சொல்லக்கூடாது என மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை தமிழக அரசு நிராகரித்துள்ளது. தடுப்பூசி குறித்த உண்மை நிலையை மக்களிடம் கூறுவோம் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்ஆய்வு மேற்கொண்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்து  விழிப்புணர்வு  பதாகைகளை வெளியிட்டார்.  இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின்  திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.  பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ரெம்டெசிவிர் மருந்துக்கு ஆரம்பத்தில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது.  முதல்வர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தற்போது தொடர்ந்து பெறப்பட்டு அந்த மருந்து 9.50 லட்சம் வாங்கப்பட்டுள்ளது.  அதில் 5.45 லட்சம் அளவிற்கு அரசு மருத்துவமனைகளுக்கும், தனியார் மருத்துவமனைக்கு 1.25 லட்சம் மருந்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் 115 சிடி ஸ்கேன் உள்ளது. கடந்த மே மாதத்தில் 1,43,530 ஆயிரம் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ வரலாற்றிலே  ஒரு மாதத்தில் இவ்வளவு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது தற்போதுதான்.  மேலும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து  மருத்துவ பணிகள் கழகத்திற்கு ₹25 கோடி வழங்கி பணிகள் வேகமாக நடைபெற உற்சாகப்படுத்தி வருகிறார்.     நீட் தேர்வு  குறித்து  ஆராய அமைக்கப்பட்ட குழு தேவையில்லாதது  மாணவர்களை குழப்புவதற்கு தான் என்று பாஜ தலைவர் கூறுகிறார் என்றால் அவர் மத்திய அரசிடம் நேரடியாக பேசி தமிழகத்திற்கு நீட் தேர்வு இல்லை என்று அறிவிக்கட்டும் அதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.   தடுப்பூசி கையிருப்பு பற்றி பொதுவில் கூறக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அதுபற்றி மக்களிடம் கூறாமல் இருக்க  முடியாது. மக்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்று வதந்தி கிளம்பி விடுகிறது.  அதனால் தினமும் இங்குள்ள நிலவரம் குறித்து சொல்லி தான் ஆக வேண்டும். நேற்று 85 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது. அதை பிரித்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. இதுவரை தமிழகத்துக்கு 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசி வந்துள்ளது. அதில் இதுவரை 97 லட்சத்து 63 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. அதேசமயம்  3.50 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே இருந்தது. இந்நிலையில் நேற்று 85 ஆயிரம் வந்துள்ளது. இன்று 3 லட்சத்து 65 ஆயிரம் வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த மாதம் 42 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும். தற்போது மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போடுகின்றனர். ஒரு நாளைக்கு 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் அதற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிடம்  2 கோடி அளவிற்கு வேக்சின் வேண்டும் என்று கூறியுள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்