SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி ஊரடங்கால் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது

2021-06-06@ 00:28:48

சேலம்: தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, 17 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாக, சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நேற்று காலை சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒருபுறம் காய்ச்சல் முகாம் நடத்தி அறிகுறியுள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்படுகிறது. மற்றொரு புறம் கூடுதல் படுக்கை எண்ணிக்கை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஊரடங்கு அமலுக்கு பிறகு 17 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இறங்கும் என நம்பிக்கை உள்ளது. நோய் தாக்கம் இருந்தும் 5 நாட்கள் வரை பொதுமக்கள் கவனக்குறைவாக இருந்தால், மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. தற்போது தினசரி 32 ஆயிரம் பேர் குணமடைந்து வரும் நிலையில், 500 பேர் வரை உயிரிழக்கின்றனர். பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளாமல், நம்பிக்கையுடன் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு தொடர்பாக, அனைத்து அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களிலும் தர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

அப்போது, மிக குறைந்த அளவு பாசிடிவ் அல்லது மிக அதிக எண்ணிக்கையில் பாசிடிவ் இருப்பது தெரியவந்தால், தற்காலிகமாக பரிசோதனையை நிறுத்த உத்தரவிடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். பணம் சம்பாதிக்க இது சமயமல்ல. காப்பீட்டு திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதுடன், நோயாளிகள் கட்டிய தொகையை திரும்ப பெற்று தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 843 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இல்லாதவர்களுக்கும் கருப்பு பூஞ்சை வருகிறது. தற்போது அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tngovt05

    சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

  • Chennai 05

    சென்னையில் அதிக பனி பொழிவில் செல்லும் வாகனங்கள்

  • Governer

    கடற்படை தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

  • planet Vaikundam

    ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

  • 04-12-2021

    04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்