SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா 2ம் அலைக்கு மத்தியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி: கடந்தாண்டு மே மாதத்தை விட 65% வருவாய் அதிகரிப்பு

2021-06-06@ 00:03:42

புதுடெல்லி: கொரோனா 2ம் அலைக்கு மத்தியில் கடந்த மே மாதம் ரூ.1.02 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வரும் நோக்கத்தில் 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அமல்படுத்தியது. இந்நிலையில், கடந்த மே மாத ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா 2வது அலை பாதிப்பிலும் கூட ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 709 கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.17,592 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.22,653 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.53,199 கோடி (இறக்குமதி சரக்குகள் மீதான ரூ.26,002 கோடி வரி உட்பட) மற்றும் செஸ் வரி ரூ.9,265 கோடி (இறக்குமதி சரக்குகள் மீதான ரூ.868 கோடி வரி உட்பட) ஆகும்.  இதன் மூலம், தொடர்ந்து 8வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. மேலும், கடந்த ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 65 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் கொரோனா முதல் அலையின் போது, நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது 2வது அலையால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், ஜிஎஸ்டி வசூல் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அதேசமயம், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சற்று சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.41 லட்சம் ஜிஎஸ்டி வசூலானது குறிப்பிடத்தக்கது. கொரோனா 2வது அலை காரணமாக, ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூன் 4ம் தேதி வரையிலும், ரூ.5 கோடிக்கு கீழ் வருமானம் ஈட்டுவோர் ரிட்டன் தாக்கல் செய்ய ஜூலை முதல் வாரம் வரையிலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, ஜூன் 4ம் தேதி வரையிலான உள்நாட்டு பரிவர்த்தனைகள் மட்டுமே மே மாத ஜிஎஸ்டி வசூலில் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, இந்த  காலக்கெடு முடிந்தபின் கணக்கெடுக்கும் போது, மே மாத ஜிஎஸ்டி வருவாய் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

  • pain-kill

    வலியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துவிட்டது Sarco Capsule எந்திரம்!: ஒரு நிமிடத்தில் உயிரை பறிக்குமாம்..!!

  • Army_helicopter_crash_Coonoor

    குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

  • tomato01

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 73 ரூபாய்க்கு விற்பனை

  • vaikundaa1

    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 5ம் திருநாள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்