SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3வது அலைக்கு முன்பே

2021-06-05@ 00:58:33

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தொற்று பரவல் குறையத்தொடங்கியுள்ளது.  அக்டோபர் மாதம் கொரோனா 3வது அலை பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளார்கள். அதற்குள், நாம் பல்வேறு கட்டுப்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களும்  தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்ற நிலையில், இனி தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியன அரசுடன் இணைந்து அவர்களது வளாகத்தில் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். இதனால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை உயரும். அதன் பிறகு பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டு இயங்கத்தொடங்கினாலும் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. பள்ளி, கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஒவ்வொருவருக்கும் கொரோனா மீதிருந்த பயம் விலகும். மாணவர்களும் தைரியமாக பள்ளிக்கு வரத்தொடங்குவார்கள். பாடங்களில் கவனம் செலுத்துவார்கள்.

கடந்த 2 ஆண்டாக பள்ளி, புத்தகம், படிப்பு ஆகியவற்றை மாணவர்கள் மறந்தே போய்விட்டார்கள். இந்நிலையை மாற்ற படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போலியோ சொட்டு மருந்து போன்று  தடுப்பூசி முகாம் அனைத்து இடங்களிலும் நடத்தப்பட வேண்டும். இதற்கு தேவையான மருந்தை மத்திய அரசு மருந்து நிறுவனங்களை தயாரிக்க ஊக்கப்படுத்தி  கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால் அடுத்த 3 மாதங்களுக்குள் 3வது அலையை எதிர்கொள்ள  அனைவரும்  உடலாலும் உள்ளத்தாலும் தயாராகிவிட முடியும். இந்த தடுப்பு நடவடிக்கையை அரசு மட்டும் தனித்து செயல்படுத்தி விட முடியாது. இதற்கு தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சமூக அமைப்புகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் நிச்சயம் சாத்தியப்படும். மேலும் இப்போதிருந்தே குழந்தைகளின் மீது அவர்களது குடும்பத்தினர் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தையின் உடல் நலத்தில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து குழந்தை நல மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை, மருந்தை கொடுக்க  வேண்டும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் அதிகம் உள்ளது. எனவே, அதை தவிர்க்க கூடாது.

ஒவ்வொரு நாளும் குழந்தைகளிடம் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று கவனித்து முன்னெச்சரிக்கையாக மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். இதனால் 3வது அலையின் போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும். குழந்தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க  வேண்டும். குழந்தைகளுடன் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் 3வது அலை என்ற பாதிப்பில் இருந்து அனைவரும் தப்பித்துக்கொள்ள முடியும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்