SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா இல்லா மாநிலமாக மாறும் தமிழகம்: சுகாதாரத்துறை அமைச்சர் கூறியது மகிழ்ச்சியாக உள்ளது: தமிழக பாஜ தலைவர் அறிக்கை

2021-06-05@ 00:30:21

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கூறியது அறிந்து மிக்க மகிழ்ச்சி. படுக்கைகள் காலியாக உள்ளன, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை மருந்துக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதாக  செய்தி வெளியிட்ட ஊடகங்கள் பாஜ தமிழக மூத்த தலைவர்கள் இந்த பிரச்னைக்கு தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்த கூடாதா என வினா எழுப்பி உள்ளனர். நாட்டில் 3 நிறுவனங்கள் மட்டுமே ஆம்போடெரிசின்-பி மருந்தை தயாரிப்பதால் நாடு முழுவதும் தட்டுப்பாடு உள்ளது. இம்மாதிரியான சூழல் இதற்கு முன்பு இல்லாததால் அதற்கான உற்பத்தி தேவை இல்லாமல் இருந்தது. இப்போது நெருக்கடியை தீர்க்க மத்திய சுகாதார அமைச்சகம் இணைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசாக செயல்படுகிறது. உரிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் அரசு இது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்