நாட்டு மக்கள் அனைவருக்கும் தினமும் 1 கோடி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்: குடியரசு தலைவருக்கு கே.எஸ்.அழகிரி கடிதம்
2021-06-05@ 00:19:51

சென்னை: நாட்டு மக்கள் அனைவருக்கும் தினமும் 1 கோடி தடுப்பூசிகள் வீதம் இலவசமாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே பாதுகாப்பு. ஆனால், தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான முதல் ஆர்டரை கடந்த ஜனவரி மாதம் தான் கொடுத்தனர். கிடைத்திருக்கும் வெளிப்படையான தகவல்களின்படி, 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மோடி அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து இன்று வரை வெறும் 39 கோடி தடுப்பூசிகளை மட்டுமே ஆர்டர் செய்துள்ளன.2021 மே 31ம் தேதி வரை, 21 கோடியே 31 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், 4 கோடியே 45 லட்சம் பேருக்கு மட்டுமே இருமுறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வயதானவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு 3 ஆண்டுகள் ஆகிவிடும்.
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஒரு டோஸ் விலை மோடி அரசுக்கு 150, மாநில அரசுகளுக்கு 300 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஒரு டோஸ் மோடி அரசுக்கு 150, மாநில அரசுகளுக்கு 600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 1,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாறுபட்ட விலையை நிர்ணயித்து, மக்களின் துயரத்திலிருந்து லாபம் சம்பாதிக்க மோடி அரசே துணைபோகிறது. மத்திய பா.ஜ. அரசே தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்து அதனை மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இலவசமாக வழங்கி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக இருக்கிறது. தற்போது தினமும் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவது போல் இல்லாமல், தினமும் குறைந்தது 1 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டால் மட்டுமே இதற்கு தீர்வு. எனவே, தினமும் 1 கோடி தடுப்பூசியை இலவசமாகப் போட மோடி அரசுக்கு உத்தரவிட உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு
பொதுக்குழு கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆதரவாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை
வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு உறுதி பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு: மாஜி அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி
சசிகலா 3 நாட்கள் சுற்றுப்பயணம்: ஆதரவாளர்களை சந்திக்கிறார்
காவல் துறையில் துணை ராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: தேமுதிக வேண்டுகோள்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!