SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 நாட்களாக மாற்றமில்லாத நிலையில் மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

2021-06-05@ 00:16:45

சேலம்: தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி இருந்த பெட்ரோல், டீசல் விலை நேற்று மீண்டும் உயர்ந்தது.  நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையின் உயர்வு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 1ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 23 காசும், டீசல் லிட்டருக்கு 22 காசும் உயர்ந்த நிலையில், கடந்த இரு நாட்களாக மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் விலை உயர்ந்தப்பட்டது.  அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 24 காசும், டீசல் லிட்டருக்கு 26 காசும் உயர்த்தப்பட்டது. சென்னையில் பெட்ேரால் ஒரு லிட்டர் 95.99க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று 96.23 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், 90.12க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், நேற்று 90.38 ஆக அதிகரித்தது. சேலத்தை பொறுத்தவரை பெட்ேரால் லிட்டருக்கு 23 காசும், டீசல் லிட்டருக்கு 27 காசும் உயர்த்தப்பட்டது. அதன்படி, சேலத்தில் 96.42 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் 96.66 எனவும், 90.56 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் 90.82 எனவும் விலை உயர்த்தப்பட்டது.

சரக்கு ரயிலில் இருந்து தனியாக கழன்ற 9 டேங்கர்கள்
நாகர்கோவில்:கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 50 டேங்கரில் ஆயில் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் நேற்று முன் தினம் நள்ளிரவில் புறப்பட்டது. நேற்று அதிகாலை 4.20 மணிக்கு இந்த ரயில் குமரி மாவட்டம் குழித்துறை - பள்ளியாடி இடையே வந்து கொண்டிருந்த போது, பின்னால் இருந்த 9 டேங்கர்கள் தனியாக கழன்றன. உடனடியாக ரயில் பள்ளியாடியில் நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விரைந்தனர். தனியாக பிரிந்த 9 டேங்கர்கள் மாற்று இன்ஜின் மூலம் இணைக்கப்பட்டு நாகர்கோவில் கொண்டு வரப்பட்டன. மற்ற 41 டேங்கர்களும் தனியாக நாகர்கோவில் வந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்