SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவிரவாதிகளுக்கு ஹவாலா பணம் கொடுத்த கர்நாடக தம்பதி கைத

2013-11-14@ 01:25:00

மங்களூர்: பாட்னாவில் நரேந்திர மோடி கூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு பண உதவி செய்த தம்பதியை கைது செய்த மங்களூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பீகார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கடந்த மாதம் 27ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திர மோடி கலந்து கொண்ட மேடைக்கு அருகே கூட்டம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் குண்டுகள் வெடித்து 7 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியதில் இந்திய முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளான இப்ராகிம், பப்பு, சேட்டு, மவுலித் சாயப், அன்சாரிகான் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானில் இருந்து 5 கோடி ஹவாலா பணம் மங்களூரில் உள்ள பெண் ஒருவரின் மூலமாக பெறப்பட்டிருப்பது தெரிந்தது.  புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தியதில், அந்த பெண் ஆஷா என்கிற ஆயிஷா பானு என தெரியவந்தது.

கணவர் ஜூபேர். மங்களூரில் குடியிருந்த இவர் தனது மனைவியுடன் சேர்ந்து ஹவாலா பறிமாற்றம் செய்து வந்தார். இந்நிலையில், இவரது கணக்கிற்கு 5 கோடி வந்துள்ளது. இதை அவர் வெவ்வேறு பெயர்களில் உள்ள வங்கிகணக்குகள் மூலமாக பாட்னா குண்டுவெடிப்பு தீவிரவாதிகளின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.இதை தொடர்ந்து மங்களூரில் பதுங்கியிருந்த ஆயிஷா பானு, ஜூபேரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் நேற்று காலை மங்களூர் 3வது கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், இவர்களை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்கும்படி, நீதிமன்றத்தில் பீகார் போலீசார் அனுமதியை கேட்டனர். இதை ஏற்று கொண்ட நீதிபதி, இருவரையும் பீகார் போலீசிடம் ஒப்படைக்கும்படி மங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பீகார் போலீ சார் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் பாட்னா அழைத்துச்சென்றனர்.

watching my girlfriend cheat open my girlfriend cheated
drug coupon card prescription coupons drug discount coupons

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்