SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆம்பூரில் சோகம்!: கொட்டும் மழையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட 2 ரயில்வே ஊழியர்கள் சரக்கு ரயில் மோதி பரிதாப பலி..!!

2021-05-31@ 13:42:46

திருப்பத்தூர்: ஆம்பூரில் கொட்டும் மழையில் சிக்னல் கோளாறை சரிசெய்துவிட்டு திரும்பிய ரயில்வே ஊழியர்கள் இரண்டு பேர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை ரயில்வே மார்க்கத்தில் கனமழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜோலார்பேட்டையை சேர்ந்த ரயில்வே பொறியாளர் முருகேசன் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த டெக்னீசியன் பர்வேஷ் குமார் ஆகியோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சிக்னல் கோளாறை சரிசெய்துவிட்டு மாற்று தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தனர். 


அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதி இருவரும் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிக்னல் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

  • sand-storm-china

    அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

  • plastic-vaste-girl

    கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

  • farmeee112

    "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்