SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.48 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்

2021-05-30@ 07:38:31

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.25 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.06 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 170,618,222 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 152,586,841 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35 லட்சத்து 48 ஆயிரத்து 491 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 14,482,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 92,104 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • planet Vaikundam

    ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

  • 04-12-2021

    04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • lunch-ofz

    லஞ்ச் டைம் ஆச்சா...இதோ வந்துட்டோம்: வேலை சுமையில் ஓடுபவர்களுக்கு அலுவலகத்திற்கு சென்று சாப்பாடு கொடுத்து அசத்தும் ஒரே குடும்பத்தினர்..!!

  • Ministers

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

  • Ohmicron_Rajiv Gandhi_Bed

    ஓமைக்ரான் எதிரொலி; வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தயார் நிலையில் 150 படுக்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்