SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையில் புதிய உச்சம்: பெட்ரோல் விலை 100ஐ தாண்டியது: ஒரே மாதத்தில் 15வது முறையாக அதிகரிப்பு

2021-05-30@ 00:14:47

மும்பை: ஒரே மாதத்தில் 15வது முறையாக பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை சதம் அடிக்கும் முதல் பெருநகரம் மும்பையாகும். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்த போது, மத்திய அரசு கலால் வரியை உயர்த்தி, பொதுமக்களுக்கு பலன் எதுவும் கிடைக்காமல் செய்தது.அதைத் தொடர்ந்து, சமீபத்தில் 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்தது. தேர்தல் முடிந்ததும், கொரோனா 2வது அலை வேகமெடுக்கத் தொடங்கிய அதே வேளையில், பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, இந்த மாதத்தில் தொடர்ச்சியாக விலை ஏற்றம் காரணமாக, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் கடந்த 2 நாட்களுக்கு முன் முதன்முறையாக பெட்ரோல் விலை 100.17 ஆக விற்பனை செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் தானே நகரிலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது. இந்நிலையில், நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் 28 காசுகளும் உயர்த்தப்பட்டது. இதனால், மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.100ஐ கடந்துள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.19 ஆகவும், டீசல் விலை 92.17 ஆகவும் விற்பனையாகிறது. பெருநகரங்களில் முதல் நகரமாக மும்பையில் பெட்ரோல் 100ஐ தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 93.94 ஆகவும், டீசல் விலை 84.89 ஆகவும் விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டர் ஒன்றுக்கு 95.51 மற்றும் 89.65 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மே 2ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மே 4ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரே மாதத்தில் 15வது முறையாக நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இந்த சூழலிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பல்வேறு தரப்பினரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

விலை விவரம்
நகரம்        பெட்ரோல்        டீசல்
சென்னை        95.51        89.65
டெல்லி        93.94        84.89
மும்பை        100.19        92.17
கொல்கத்தா    93.97        87.74

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்