SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டசபையில் பலத்தை 12 ஆக அதிகரித்தது ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக

2021-05-28@ 01:23:23

புதுச்சேரி: புதுச்சேரியில் ரங்கசாமி அரசுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது.  புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் முடிந்து 23 நாட்களுக்குபின்  எம்.எல்.ஏ.க்கள்    நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் 6  பேர், நியமன எம்எல்ஏக்கள் 3 பேர், பாஜகவுக்கு ஆதரவளிக்கும் சுயேட்சைகள் 2  பேரும் அடங்குவார்கள். இதற்கிடையே, திருபுவனை  தொகுதி சுயேட்சை எம்எல்ஏவான அங்காளனும், மரியாதை நிமித்தமாக பாஜக மேலிட  பார்வையாளர் நிர்மல்குமார் சுரானாவை சந்தித்ததால் அக்கட்சியின் ஆதரவு  பலம் 12 ஆக அதிகரித்தது. பின்னர்  அவர்கள்  நமச்சிவாயம்  தலைமையில் கவர்னர் தமிழிசையை சந்தித்து  வாழ்த்து பெற்றனர். அப்போது சட்டசபையில் பாஜகவின் பலம் 12 ஆக  அதிகரித்துள்ளது குறித்தும், உள்ளாட்சி தேர்தல்கள், அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது.

பாஜகவின் இந்த நடவடிக்கை முதல்வர்  ரங்கசாமிக்கு அடுத்தகட்ட நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அவரது  கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளது. சுயேட்சைகளில் 3 பேர் பாஜகவுக்கு ஆதரவை தெரிவித்து விட்டனர். மீதமுள்ள 3  சுயேட்சைகள் எந்த கட்சிக்கும் தங்களது ஆதரவை  அறிவிக்கவில்லை.  அதனால், என்.ஆர். காங்கிரசைவிட தங்களுக்கு அதிக பலம்     இருப்பதை முதல்வர் ரங்கசாமிக்கு சூசகமாக தெரிவித்துள்ள பாஜக, துணை முதல்வர்  பதவியை பெற தங்களுக்கு தகுதி இருப்பதை வெளிகாட்டி வருகின்றனர். ஆனால், துணை முதல்வர்   பதவியை கொடுத்தால் தனக்கான  அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ரங்கசாமி மவுனம் காத்து வருகிறார்.

எம்எல்ஏக்கள் பலம்
புதுச்சேரி சட்டசபையில் கட்சி வாரியாக எம்எல்ஏக்கள் பலம்
மொத்த எம்எல்ஏக்கள்    33
என்.ஆர். காங்கிரஸ்     10
பாஜக    12
திமுக    6
காங்கிரஸ்    2
சுயேட்சைகள்    3


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

  • sand-storm-china

    அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

  • plastic-vaste-girl

    கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

  • farmeee112

    "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

  • arjennn11

    திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்