SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்: அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும்..! கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு

2021-05-24@ 18:15:52

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி. தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்தடுத்த நாட்களில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறிவிட்டனர். கமல்ஹாசன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர். இதனால், மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாற்றம் ஒன்றே மாறாதது. அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் இயற்றிய கொடி பறந்து கொண்டிருக்கிறது.

மூச்சு உள்ளவரை அதன் பாதுகாவலனாக நான் இருப்பேன் என தொடங்குகிறது அந்த வீடியோ. அதில் கமல்ஹாசன் பேசுகையில், ஊர் அடங்கினாலும் வாய் அடங்காது என்பதற்கு பல உதாரணங்கள். அதில் ஒன்று நாம் ஆகிவிடக்கூடாது. மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும் சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்ன வைக்க நான் நினைத்தது தான் சிலருக்கு சர்வாதிகாரமாக தெரிகிறது. திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளை கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே கொடுத்து வளர வழி செய்தேன். அன்று அவர்களுக்கு ஜனநாயகத்தில் உச்சகட்டமாக தெரிந்திருக்கிறது. பிறகு காலச்சூழலில அது அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. கூட்டணி அமைப்பதில் நாம் காட்டிய வெளிப்படைத்தன்மை அதை தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ஜனநாயகம் அனைவரும் அறிந்தவை.

தோல்விக்குப் பின் அவரவர்க்கு இருக்கும் தார்மீக கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகவாதி செல்லும் செய்யும் செயல். கடமைகளை மறந்து நிகழ்ந்து விட்ட தவறுகளை கொட்ட ஒரு குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாக படுகிறது. அது ஜனநாயகம் அல்ல. உண்மை எல்லாம் தெரிந்தும் ஊமையாக இருக்க சொல்கிறீர்களா எனக் குரல் எழுப்பும் தொண்டர்களுக்கு, உறவே வாதாடு. என் அருமை தமிழ் போதும் அவர்களுக்கு. மறந்தும் நம்மொழி மாசுபடாது இருக்கட்டும். நம் தரம் குறையாது இருக்கட்டும். கட்சியின் உள்கட்டமைப்பை தனிமனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்காக மாற்றி ஆடிய விளையாட்டு இனி தொடராது. செயல்வீரர்கள் செயலாற்றும் அவர்களின் கரங்களை வலுப்படுத்த கூடும். பாதையில் நேர்மை இருப்பதால் நம் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியலில் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்று கூறுகிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • karnataka-schools-25

  20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

 • wheel-uae-25

  250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்