ரெம்டெசிவிர் மருந்துக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த இன்ஜினியர்: கோவை தனியார் மருந்து நிறுவனம் மீது போலீசில் புகார்
2021-05-23@ 01:05:22

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை வைகைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (26). இன்ஜினியரிங் பட்டதாரி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் மாவட்டம் மேட்டூரில் சிகிச்சை பெறும் மாமாவுக்காக கடந்த 15ம் தேதி ஆன்லைனில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்குமா? என கிஷோர் தேடியுள்ளார். அப்போது, கோவை தனியார் மருந்து நிறுவனம் ஒன்று, 6 டோஸ்ரெம்டெசிவிர் மருந்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்பது தெரிந்தது.
இதை பார்த்த கிஷோர், முன்பணமாக ரூ.10,500ஐ ஆன்லைனில் அந்த நிறுவனத்துக்கு அனுப்பியதாகவும், மருந்தை அனுப்பி வையுங்கள். மீதி பணத்தை தந்து விட்டு வாங்கிக் கொள்கிறேன் எனவும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த நிறுவனம் அனைத்து பணத்தையும் கட்டினால்தான் மருந்து அனுப்பப்படும் என தெரிவித்ததோடு தொடர்பையும் துண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிஷோர், கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வடக்கிபாளையம் பிரிவு மேம்பால பக்கவாட்டு சுவரில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ஊழல் தலை விரித்தாடுகிறது: திட்டங்களை தட்டிப்பறிப்பதாக விவசாயிகள் வேதனை
தொடர் மழை எதிரொலி; ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: பொக்லைன் கொண்டு அகற்றம்
அந்தரத்தில் மிதந்தபடியே ஏரியின் எழிலை ரசிக்கலாம்: கொடைக்கானலில் ஜிப் லைன் சுற்றுலா அறிமுகம்
கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு
இயற்கை எரிவாயு இணைப்புக்கு சேலத்தில் குழாய் பதிப்பு தீவிரம்: விரைவில் வீடுகளுக்கு வழங்க முடிவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்