SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகர் கட்சியின் கூடாரத்தை கலைத்து பழிதீர்க்கும் மருத்துவரின் நடவடிக்கை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-05-16@ 00:03:45

‘‘பத்து லட்சம் வாங்கிக் கொண்டு பெண் குழந்தை விவகாரத்தில் தொழிலதிபரை தப்பவிட்ட காக்கி பெண் உயரதிகாரி டென்ஷன்ல இருக்காங்களாமே, ஏன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்தில் கடந்த மாதம் 10 லட்சம் ரூபாய்க்கு சிறுமியை விற்பனை  செய்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது. 6 மாதமா அந்த சிறுமியை  தொழிலதிபர் ஒருவர் அவரது வீட்டில் வைத்திருந்தார். இதனால பதறிபோன  சிறுமியின் பாட்டி டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேசனுக்கு கண்ணீரும் கம்பலையுமா  ஒடியிருக்காங்க. சிறுமியை மீட்ட நிலையில் வழக்கு பதிவு செய்யலையாம். பத்து  லட்ச ரூபாய்க்கு குழந்தைய கொடுத்துட்டேன்னு தாய் சொன்ன வாய்ஸ் மெசேஜ்  வந்தபிறகு தான் வழக்கு போட்டாங்களாம். இத உன்னிப்பா கவனிச்சிக்கிட்டிருந்த  தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்துல தலையிட்டது.  அதன்அதிகாரிகள் நேரில் வந்து விசாரிச்சாங்க. இந்த வழக்கை கையாண்ட முறை,  அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்திச்சாம். அந்த பெண் காக்கி உயரதிகாரி, கண் கலங்கி  சொன்ன விளக்கம், ஆணையம் ஏத்துக்கிறமாதிரி இல்லையாம். இதனால அந்த பெண்  காக்கி உயரதிகாரி மீது துறை ரீதியா நடவடிக்கை எடுக்கணும்னு அரசுக்கு, ஆணையம்  பரிந்துரை செஞ்சிருக்காம். இதனால பெண் காக்கி உயரதிகாரி தரப்பு கடும் அதிர்ச்சியில  இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பழைய விசுவாசத்தில் இருக்கும் பூட்டு மாவட்ட பேரூராட்சியில் உள்ள ஒரு பெண் அதிகாரியை பற்றி என்ன பேசிக்கிறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்டத்தின் ‘பட்டுக்கு பெயர் போன ஊரின்’ உள்ளாட்சி அலுவலக பெண் அதிகாரி, தனக்கு  ஒத்து வராத, அதிகாரிகள், ஊழியர்களை இஷ்டத்திற்கு டிரான்ஸ்பர் செய்கிறாராம். பல்வேறு காரணங்களை கூறி பிரஷர் கொடுக்கிறாராம். இதன் பின்னணியில், சென்னை இயக்குநரக அதிகாரி ஒருவர் தனக்குத் தெரிந்தவர் எனக்கூறிக் கொள்ளும் இவர், தற்போது வரை இலைக்கட்சியினருக்கு ஆதரவாகவே, பழைய விசுவாசத்திலேயே செயல்பட்டு வருகிறாராம். இதற்கு எதிர்ப்பு வலுப்பதால், எதற்கு வம்பென்று தற்போது இலைக்கட்சி வென்ற தொகுதிக்கு, பணியிட மாற்றத்திற்கு முயற்சித்து வருகிறாராம். இதற்கென அங்குள்ள அதிகாரியை வெளிமாவட்டத்துக்கு மாற்றவும் காய் நகர்த்தி வருகிறாராம். இவர் ஏற்கனவே மாவட்டத்தில் ‘கோட்டையில்’ முடியும் உள்ளாட்சி பகுதியை கூடுதலாக கவனித்து வந்தபோது, இலைக்கட்சிக்காரர்கள் துணையோடு, வணிக வளாக ஏலம், பூமார்க்கெட் ஏலம் மற்றும் பேரூராட்சி கான்ட்ராக்ட் பணிகளில் பெரும் தொகை பார்த்திருக்கிறாராம். இப்போதும் வசூல் வருவாய் பார்க்கும் வகையில் இந்த மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறாராம். அதே நேரம் இவரது மாற்றக் கோரிக்கைக்கும் எதிர்ப்பு வலுத்திருப்பது தான் இப்போதைக்கு ‘ஹாட்’ டாபிக்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உயரதிகாரியை காப்பற்ற போய்... பிரச்னையில் சிக்கி சஸ்பெண்ட் ஆன அதிகாரியின் பரிதாப கதையை சொல்லேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே தனியார் சமுதாய கோயில் ஒன்றை இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்கு கொண்டுவரப்போவதாகவும், அதற்கு பொதுமக்கள் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று கூறி நீதிமன்ற உத்தரவு ஒன்றை திரித்து வாசகங்களை பதிவு செய்து கால தாமதத்துடன் அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றை கோயிலில் ஒட்ட பெண் அதிகாரியை துறையின் உயர் அதிகாரி பணித்துள்ளார். பெண் அதிகாரியும் மேலதிகாரி உத்தரவை ஏற்று வேறுவழியின்றி நோட்டீஸ் ஒட்டி போட்டோ எடுத்துவிட்டு பின்னர் அது பொதுமக்கள் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக நோட்டீசை உடனேயே கிழித்து எடுத்து சென்றுவிட்டார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வைரலானது. உயர் அதிகாரியோ தனது தலையை யாரும் உருட்டிவிடக்கூடாது என்பதற்காக அந்த பெண் அதிகாரியை உடனே சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். உயர் அதிகாரி உத்தரவிட்டதால் தானே நான் கோயிலுக்கு சென்று நோட்டீஸ் ஒட்ட சென்றேன். இப்போது என்னை பலிகடா ஆக்கிவிட்டார்களே என்று அந்த பெண் அதிகாரி காண்போரிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம்... பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்று இதை தான் சொல்வார்களோ...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ நடிகர் கட்சியை காலி செய்யும் மருத்துவரின் ‘ரிவென்ஞ்’ பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை  மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மருத்துவர் கட்சி தொடங்கி உள்ள நடிகரின்  நெருங்கிய நண்பராக இருந்தார். கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை  தொகுதியில் போட்டியிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர்  தொகுதியில் போட்டியிட்டு  மூன்றாவது இடத்தை பிடித்தார். இதனால் இவர் மீது  கட்சியின் மேலிடத்தில் நம்பகத்தன்மை அதிகரித்தது. ஆனால், தற்போது நடந்து  முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கசப்புணர்வு அதிகமாகி,  கடைசியில் கட்சியை விட்டே சென்றுவிட்டார் மருத்துவர். கட்சியை விட்டு  விலகினாலும், மருத்துவர் சும்மா இருக்கவில்லை. கோவை மாவட்டத்தில் பிற  சட்டமன்ற தொகுதிகளில் நடிகரின் கட்சி சார்பில் நின்று போட்டியிட்ட  வேட்பாளர்களுடன் கட்சியில் இருந்து வெளியே வருமாறு ேபசி வருகிறாராம்  மருத்துவர். தன்னை பகைத்து கொண்டால் என்ன ஆகும் என்பதை காட்டவே, கோவையில்  நடிகரின் கட்சியில் ஒருத்தர் கூட இருக்கக் கூடாது என்பதை மய்யமாக வைத்து  செயல்படுவதாக அதே கட்சியில் டாக் ஓடிக் கொண்டு இருக்கிறது...’’ என்றார்  விக்கியானந்தா.         

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்