கொரோனாவால் பாதித்தவர்கள், ஆதரவற்றோரின் வீடுகளை தேடிச்சென்று 3 வேளை இலவச உணவு: ஓராண்டாக தொடரும் தேனி இளைஞர் சேவை
2021-05-15@ 00:30:31

தேனி: கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமையில் இருப்பவர்களுக்கு தேனியைச் சேர்ந்த இளைஞர், வீடுகளுக்கு சென்று உணவளிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் மகேஷ்ராஜ் (36). இவர், தேனி எடமால் தெருவில் செல்போன் சர்வீஸ், விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமையில் இருந்து பணம் இல்லாமல் தவிப்பவர்களுக்கும், சாலையோரம் வசிப்பவர்களுக்கும் மகேஷ்ராஜ் கடந்த ஓராண்டாக உணவு வழங்கி வருகிறார்.
காலை, இரவு இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் மதியம் காயுடன் கூடிய தக்காளி சாதம், லெமன் சாதம் என சுழற்சி முறையில் தினசரி 200 நபர்களுக்கு உணவளித்து வருகிறார். குடும்பத்தினர் தயாரித்த உணவு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு டூவீலரில் 20 கி.மீ. வரை சுற்றி வருகிறார். அப்போது சாலையோரத்தில் உணவின்றி தவிப்பவர்களுக்கு் உணவு வழங்கிச் செல்கிறார். தொலைபேசியில் அழைப்பவர்களுக்கும் அவர்களது வீட்டிற்கே சென்று உணவளித்து வருகிறார்.
இதுகுறித்து மகேஷ்ராஜ் கூறுகையில், ‘‘‘‘குடும்பச்சூழலால் சிறு வயதிலேயே உணவின் தேவையை நன்கு உணர்ந்தேன். பேரிடர் காலங்களில் கேரளாவுக்குச் சென்று உதவினேன். கடந்தாண்டு கொரோனா பாதிப்பின்போது, சாலை ஓரத்தில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவு அளித்தேன். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்பட்டு உணவின்றி தவிப்பவர்களுக்கு, உணவு அளித்து வருகிறேன். இதற்காக எனது செல்போன் எண்ணை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளேன்’’ என்றார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில பல்வேறு இடங்களில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
தடுப்பணை மதகுகள் மூடி வைக்கப்பட்டுள்ள அவலம்; கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் வீணாகும் மழை வெள்ளம்: நிரந்தர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
ஆந்திர வனப்பகுதிகளில் கோடை மழையால் மோர்தானா அணை நிரம்பி பெரிய ஏரிக்கு செல்லும் உபரிநீர்: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
குவாரியில் சிக்கியவர்களை மீட்க துரித நடவடிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களோடு வந்து கதறி அழுத பெண்கள்
வானூர் அருகே கழுப்பெரும்பாக்கத்தில் வவ்வால்களின் சரணாலயமாக திகழ்ந்த 250 ஆண்டுகால ஆலமரம் சாய்ந்தது
கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து கிடைக்கும் தாழிகள்: ஆய்வாளர்கள் ஆச்சரியம்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!