கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளியில் விதிமுறைகளை மீறி கடைகள் திறப்பு-உரிமையாளர்களுக்கு அபராதம்
2021-05-14@ 12:54:15

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி கடைகள் பகல் 12 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மளிகை மற்றும் காய்கறி கடைகள் நீங்கலாக பிற கடைகள் பகலில் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும், சமூக இடைவெளியை அவர்கள் கடைபிடிக்கவில்லை என அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் தலைமையில அலுவலர்கள் நேற்று காலை ஆய்வு செய்தனர்.
அவர்கள் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், கிருஷ்ணகிரி டவுன் மற்றும் பெரியமுத்தூர் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு தொடரும் என்றும், தொடர்ந்து விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கடைகள் திறந்து வைத்திருந்தால் அபராத தொகை அதிகமாக வசூலிக்கப்படும் என்றும், கடை மூடி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளியில் நேற்று காலை வேளாண்மை துணை இயக்குனர் வானதி தலைமையில் பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுனர். அப்போது காந்தி சிலை அருகே விதி மீறி திறந்திருந்த பெயிண்ட் கடை, குப்பம் ரோடு சந்திப்பில் உள்ள பேக்கரி கடை ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து விதி மீறி திறந்திருந்த மற்ற கடைக்காரர்களும் அவசரம் அவசரமாக கடைகளை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர். எச்சரிக்கைகளை மீறி திறக்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரம்!: இஸ்திரி, தேநீர் போட்டுக் கொடுத்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய ஆர்.பி.உதயகுமார்..!!
சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்., அதிமுக, தேமுதிக வேட்பாளர் உள்பட 80 வேட்புமனுக்கள் ஏற்பு..!!
உத்திரமேரூர் களியாம்பூண்டி அருகே “நான் வந்துட்டேன்’’... பிறந்த குழந்தை பேசியதா?.. வதந்தியால் திடீர் பரபரப்பு
நாமக்கலில் ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்து
பள்ளிப்பட்டு 13வது வார்டில் பிரதான சாலையில் கழிவுநீர் தேக்கம்: நோய்தொற்று பரவும் அபாயம்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!