இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம்
2021-05-14@ 03:08:30

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரமேஷ் பவார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டபிள்யூ.வி.ராமன் பதிவிக் காலம் முடிவடைத்த பிறகு புதிய பயிற்சியாளர் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. புதிய பயிற்சியாளர் பதவிக்கு ராமன், ரமேஷ் உட்பட 35பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4 பெண்கள் உட்பட 8பேர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்களிடம் கடந்த 2 நாட்களாக காணொளி மூலம் தேர்வு நடந்தது. அதனை முன்னாள் வீரர்கள் மதன்லால், ஆர்.பி.சிங், வீராங்கனைகள் சுலக்ஷனா நாயக் ஆகியோரை கொண்ட குழு மேற்கொண்டது. அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமேஷ் பவாரை மீண்டும் தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ நேற்று நியமித்தது.
இவர் ஏற்கனவே இந்திய மகளி–்ர் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்துள்ளார். அப்போது நடந்த டி20 உலக கோப்பை போட்டி அரையிறுதியில் மிதாலி ராஜை வேண்டுமேன்றே தவிர்த்தார். அவரின் நடவடிக்கையால் அரையிறுதியில் இந்தியா தோற்றது. ஹர்மன்பிரீத் கவுருக்கு முன்னுரிமை, தந்து சீனியர் மிதாலி ராஜை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அதனால் கேப்டன் மிதாலி ராஜ் வெளிப்படையாக ரமேஷ் மீது குற்றச்சாட்டுகளை கூறினார். பிசிசிஐயிலும் புகார் தெரிவித்தார். விசாரணைக்கு பிறகு ரமேஷ் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து 2018ல் நீக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன்: சிஎஸ்கே கேப்டன் தோனி
குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு கோஹ்லி உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார்: கேப்டன் டூபிளெசிஸ் பாராட்டு
ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானுடன் இன்று மோதல் ஆறுதல் வெற்றிபெறுமா சென்னை?
ஆர்சிபி அணிக்கு எதிராக ஹர்திக் அரை சதம் விளாசல்
ஆர்ச்சர் மீண்டும் காயம்
ஸ்டிராஸ்போர்க் சர்வதேச டென்னிஸ்: அரையிறுதியில் காயா யுவான்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்