SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோல்விக்கு பிறகு காணாமல் போன மாஜி அமைச்சரை அதிமுகவினர் தேடுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-05-13@ 00:13:24

‘‘சில காக்கிகள் கரன்சி பார்ப்பதில் ஆண், பெண் பேதம் எல்லாம் பார்ப்பது இல்லையாமே. பத்தூர் மாவட்டத்தில் என்ன நடந்தது...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டம் வாணி பெயர் கொண்ட ஊரான டவுன் ஸ்டேஷன்ல பெயர்லயே தனத்தை வெச்சிருக்குற லேடி கான்ஸ்டபிள் பணியாற்றி வர்றாரு. இவங்க முதல்ல அதே  ஸ்டேஷன்ல, பாஸ்போர்ட் செக்‌ஷன்ல பணிபுரிஞ்சு வந்தாங்களாம். அப்பவே ஒரு  பாஸ்போர்டுக்கு இவ்ளோன்னு ரேட் பிக்ஸ் பண்ணி வசூல் செய்வாராம். இதுல மாசத்துக்கு ஒரு பெரிய தொகைய சம்பாதிப்பாராம்.
இந்த சைடு இன்கம் மேட்டர் வெளிச்சத்துக்கு வந்ததும், அங்கிருந்து ஜென்ரல் டியூட்டிக்கு மாத்தினாங்களாம். கொஞ்ச நாள் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்ததாம். அதுக்கப்புறமா அந்த ஸ்டேஷனுக்கு பெயரின் முடிவில் நாதனை கொண்ட 2 ஸ்டார் காக்கி டிரான்ஸ்பராகி வந்தாராம்.
அவர் வந்த உடனே, லேடி கான்ஸ்டபிளை  கம்ப்யூட்டர் ஆபரேட்டராக மாற்ற ரெக்கமென்ட் செஞ்சி, மாத்திட்டாராம். இப்ப மறுபடியும், சைடு இன்கம்முக்கான வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டாங்களாம் லேடி கான்ஸ்டபிள்... போலீஸ் நிலைய ரகசியங்களை வெளியே கசிய விட்டும் கரன்சி பார்க்கிறாராம்.
இவங்களுக்கு உறுதுணையாக 2 ஸ்டார் காக்கி இருக்குறாராம். 3 ஸ்டார் காக்கிக்கும் கொடுக்க வேண்டியத கொடுக்குறாங்களாம். இதனால, இந்த பெண் காக்கியின் ஆட்டம் ஓவரா இருக்குதாம். இதனால பொதுமக்கள் பெட்டிஷன் கொடுக்கப் போகவே பயப்படறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி அமைச்சரை ஏன் தொண்டர்கள் வலைவீசி தேடறாங்க... அவர் ஏன் யாரையும் சந்திக்க விரும்பல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ்  மாவட்ட சட்டமன்ற தொகுதியில் இலைகட்சி வேட்பாளராக மாஜி அமைச்சரான  விஜயமானவர் போட்டியிட்டு இருந்தார். இதற்காக நகராட்சிக்குட்பட்ட 48 வார்டு பகுதி நிர்வாகிகளை வீட்டிற்கு வரவழைத்து எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை. 2வது முறையும் வெற்றி பெற வேண்டும். இது என்னுடைய வாழ்க்கை  பிரச்னை என நிர்வாகிகளுக்கு கறாரா உத்தரவிட்டிருந்தாராம். இதனால் வார்டுக்கு ஒரு பணிமனை அமைக்கப்பட்டு வீடு வீடாக இலைகட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
இதுதவிர வாக்குப்பதிவின் போது  பணிமனையில் பணியாற்றிய தொண்டர்களுக்கு 2 பச்சை நோட்டு தருவதாக விஜயமானவர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்ததால் அவர்களும் சலைக்காமல் பணியாற்றினார்களாம்.. வாக்குப்பதிவு முடிந்ததும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மட்டுதான் தலா 2 பச்சை நோட்டு வழங்கப்பட்டதாம்.  வாக்குப்பதிவின் போது பணியாற்றியவற்களுக்கு வழங்கப்பட வில்லையாம். இதனால் விஜயமானவர் மீது தொண்டர்கள் அதிருப்தியில் இருந்தார்களாம். தேர்தல் முடிவுகள் வந்ததும் பணம் வழங்கப்படும் என விஜயமானவர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டதாம்..
விஜயமானவர் எப்படியும் வெற்றி பெற்று விடுவார். நமக்கு வரவேண்டிய 2 பச்சை நோட்டு வீடுதேடி வந்து விடும் என தொண்டர்களும் நம்பிக்கையில் இருந்தார்களாம். ஆனால்.. விஜயமானவர் தோல்வியடைந்ததால் தொண்டர்களுக்கு எப்படி பணம் கொடுப்பது.. விஜயமானவரை எந்த முகத்தோடு சந்தித்து பணம் கேட்பது என தெரியாமல் 48 வார்டுகளில் உள்ள நிர்வாகிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றார்களாம்.. தொண்டர்களும் இதைப்பற்றி எதுவும் கவலைப்படாமல் அந்தந்த பகுதி நிர்வாகிகள் வீடுகளுக்கு தினமும் படையெடுத்தவாறு தங்களுக்கு எப்போது 2 பச்சை நோட்டு கிடைக்கும் என நச்சரித்து வருகின்றனர். இதனால் இலைக்கட்சி நிர்வாகிகள் விஜயமானவர் மீது கடும் அதிருப்தியிலும் இருக்கிறாராம். அதேபோல தொண்டர்களை இப்போதைக்கு பார்க்க விரும்பவில என்று விஜயமானவர் வெளிப்படையாக சொல்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா மாவட்டத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போகப்போவது யாரு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அதிமுகவில் புதிதாக தேர்வான 2 எம்எல்ஏக்களும் தங்களது ராஜ்ய சபா எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இந்த காலியிடங்களை பிடிக்க அதிமுகவினர் குஸ்தி போட்டு வருகின்றனர். ராஜினாமா செய்த வைத்தியலிங்கத்தின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு மட்டுமே இருந்தாலும், கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் உள்ளதாம். இதனால் முனுசாமியின் பதவிக்கு தான் குடுமிப்பிடியாம். ஜெயலலிதா இருந்தபோது நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, முத்துக்
கருப்பன், மனோஜ்பாண்டியன் என நான்கு பேர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக இருந்தனர்.
இதில் மனோஜ்பாண்டியன் தற்போது எம்எல்ஏவாகி விட்டார், சசிகலா புஷ்பா அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் இணைந்து விட்டார் என்பதால், முன்னாள் பெண் எம்பி தான் 2வது முறையாக ராஜ்ய சபா எம்பி பதவியை பிடிக்க காய் நகர்த்துகிறாராம். சட்டசபை தேர்தலில் தனக்கு வாய்ப்பு கேட்டும் அளிக்கப்படாத நிலையில் இந்த இடத்தையாவது தாருங்கள் என்கிறாராம்... முடிவுகள் தலைமையின் கையில் என்பதால் காத்திருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்