SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கட்சியின் இடைத்தரகர்கள் கரன்சியை பதுக்கியதால் கடன் வாங்கிய வேட்பாளர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-05-12@ 00:05:59

‘‘சிவ பெயரில் துவங்கும் மாவட்டத்தில் ‘தூங்கா நகர’ பெயரை கொண்ட சட்டமன்ற ெதாகுதியில் தலையில் துண்டு போட்டுக் கொண்டு இலை கட்சி நிர்வாகிகள் மறைந்து செல்லும் மர்மம் என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடவுள்- நதி பெயரிலான மாவட்டத்தில், மண்ணுக்கு புகழ் பெற்ற ‘‘கோயில் நகர் பெயரில்’’ முடியும் தொகுதியை ஆளுங்கட்சி கைப்பற்றி இருக்கிறது. கடந்த 32 ஆண்டுகளாக தக்க வைத்திருந்த தொகுதி கை நழுவிப் போனதில் இலைக்கட்சியினர் ஓவர் அப்செட்டாம். கட்சி நிர்வாகிகளின் அலட்சியப்போக்கே தொகுதியை இழப்பதற்கு முக்கிய காரணமென கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அத்துடன் அந்த ெதாகுதியில் கெத்து காட்டிய இலை நிர்வாகிகள் மற்றவர்கள் எள்ளி நகையாடப்போகிறார்கள் என்று தலையில் துண்டை போட்டு முகத்தை மறைத்து செல்கிறார்களாம்.
அதிலும் வாக்காளர்களுக்கு வழங்குவதாகக் கூறி வாங்கி வந்த பெரும் தொகையில் 60 சதவீதத்தை தங்கள் பாக்கெட்டுகளுக்குள் நிர்வாகிகள் பங்கிட்டுக் கொண்டார்களாம். இவர்கள் இலை கட்சி வேட்பாளரை பார்ப்பதையே தவிர்க்கிறார்களாம். கூட்டணி கட்சிகளுக்கு சாதகமான சில ஒன்றியங்களிலும் கூட ஓட்டுகள் குறைவாக விழுந்திருக்கின்றன. இதற்கு கூட்டணி கட்சியினரை மதிக்காததும் தோல்விக்கு முக்கிய காரணம் என்கின்றனர். மொத்தத்தில் தொகுதிக்குள் மறு ஆய்வு செய்து, தோற்றுப்போக வைத்த நிர்வாகிகளை எல்லாம் கூட்டோடு மாற்ற வேண்டும் என்று இலைக்கட்சித் தொண்டர்கள், தலைமைக்கு அன்றாடம் மனுக்களை குவித்து வருகிறார்களாம்.. தோல்விக்காக கட்சியில் இருந்து இப்போது யாரையும் தூக்க முயற்சிப்பது தேன் கூட்டில் கை வைப்பது போல என்பதால் இலை தலைமை மனுக்களை வாங்கி மட்டும் வைத்துக் கொள்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடன் வாங்கி போட்டியிட்ட வேட்பாளர்கள் கண்ணீர் விட்டு அழும் கதையை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதியில் 5 தொகுதிகளில் இலைகட்சி போட்டியிட்டது. இதில் நாடு பெயர் கொண்ட சட்டமன்ற தொகுதியில் மட்டுமே இலைகட்சி வென்றது.. ஆனால் மற்ற 4 தொகுதிகளில் தோல்வியடைந்ததாம். இதற்கு காரணம் இலைகட்சி தலைமை கொடுத்த கோடிக்கணக்கான பணம் தோல்வி கண்ட தொகுதிகளுக்கு முழுமையாக போகவில்லையாம். இதுதான் தோல்விக்கு காரணம் என்று விரக்தியில் இருக்க கூடிய வேட்பாளர்கள் அவர்களது நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறார்களாம். ஆனால், நாடு பெயர் கொண்ட சட்டமன்ற தொகுதிக்கு பணம் வாங்கிய வைத்தியமானவர் ஓட்டுக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கொடுத்து வெற்றி கண்டாராம். ஆனால் மற்ற 4 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் செலவுக்கு கூட பணம் இல்லாமல் வட்டிக்கு லட்ச கணக்கில் வாங்கி செலவு செய்தார்களாம். எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என கடைசி வரைக்கும் நம்பிக்கையில் இருந்தார்களாம். ஆனால், இப்போது அவர்களது நம்பிக்கை பொய்த்து கடனாளிகளாக மாறி இருப்பது தான் மிச்சமாம். தோல்வி கண்ட தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் கொண்டு போய் சேர்க்காததால் அந்த பணம் எங்கு சென்றது என்ற தகவல் தலைமையிடத்துக்கு ரகசியமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்..
கோடிக்கணக்கான பண விவகாரத்தில் யார் சிக்க போகிறார்களோ என நெற்களஞ்சிய மாவட்டம் முழுவதும் இலைகட்சிக்குள் அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம். அதைவிட தோற்ற வேட்பாளர்கள் எங்கள் கடன் பிரச்னையை தீர்க்க பணம் கொடுத்து உதவுங்க என்று இலை தலைமையிடம் கண்ணீர்விட்டு அழும் நிலையில் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல ஆட்டம் போடும் வெயிலை பற்றியும்... ஆட்டத்தின் போக்கை மாற்றிய அதிகாரி பற்றியும் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்துல பெரும்பாலான அரசு அதிகாரிங்க எலக்‌ஷனுக்கு முன்னாடி வரைக்கும் இலைக்கட்சிக்கு ஆதரவா ஒருதலைபட்சமாக செயல்பட்டு ஆட்டம் போட்டு வந்தாங்க. சில பேர் அதுக்குமேல போய், இலைக்கட்சியோட கொள்கை பரப்பு செயலாளர்களாகவே மாறியிருந்தாங்க. இதுல குறிப்பா சொல்லணும்னா, வெயிலூர் மாவட்டத்துல முக்கிய உயர் பதவிகள்ல இருக்குற சிலர் இலைக்கட்சிக்கு வெளிப்படையாவே ஆதரவாக செயல்பட்டாங்க. எலக்‌ஷன் டைம்ல மறைமுகமாகவும், ஹெல்ப் செஞ்சாங்க. இப்ப ஆட்சி மாறிப்ேபானதால, எப்ப வேணும்னாலும் டிரான்ஸ்பர் செய்வாங்கன்னு அலறி வர்றாங்களாம். இதுல சிலபேர் டெக்னிக்கா காய் நகர்த்தி வர்றாங்களாம். அது எப்படின்னா? நாங்க ஆரம்பத்துல இருந்து ஆளுங்கட்சி தான்னு சொல்லி வர்றாங்களாம். இதுல முக்கியமா வெயிலூர் கலெக்டர் அலுவலகத்துல மக்களோட தொடர்பான அலுவலரு, இலைகட்சி கொ.ப.செ, ஆக செயல்பட்டுக்கிட்டிருந்த நிலையில, சமீபத்துல, கலெக்டர் அலுவலகத்துல நடந்த நிகழ்ச்சியில பங்கேற்க வந்த திமுக எம்எல்ஏக்களுக்கு, முதல் ஆளா ஓடிப்போய் பூங்கொத்து கொடுத்து வரவேற்குறாராம், இரட்டை வேஷம் போடும் மக்களோட தொடர்பான அலுவலர். பதவியையும், பணியாற்றுற இடத்தையும் தக்க வெச்சுக்க, காக்கா புடிக்குற வேலைய தொடங்கிட்டாருன்னு, அந்த ஆபிஸ் ஊழியருங்களே கிண்டலடிங்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.  
‘‘மக்களை மறந்து தன் சொந்தங்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து அனுப்பும் அதிகாரி பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ மாங்கனி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அனைத்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழியுது. அந்த மருத்துவமனைகளில் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் உள்ளதா என்று மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட மண்டல மருந்து கட்டுப்பாடு அதிகாரி மட்டும் வழக்கம் போல், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இங்கிருந்து தனது உறவினர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை அனுப்பி வைப்பதிலேயே குறியா இருக்கிறாராம்...’’ என்றார்
விக்கியானந்தா.               

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்