SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனிக்காரரை ஓரங்கட்ட சேலம்காரர் காய் நகர்த்தும் வேலையை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2021-05-11@ 00:20:16

‘‘மப்டி டிரஸ் காரணமாக போலீசுக்கே அபராதம் போடும் போலீஸ் பற்றிச் சொல்லுங்க....’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கடலோர  மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க  மாவட்ட காவல் எல்லையில் கடைசி பெயர் கொண்ட பாளையத்தில் செக்போஸ்ட்  அமைக்கப்பட்டுள்ளது. இங்கு  காக்கி எஸ்ஐ தலைமையில் 2 ஏட்டுக்கள் பணியில்  உள்ளனர். இந்த செக்போஸ்ட் வழியாக வரக்கூடிய வாகனங்களை நிறுத்தி தீவிர  விசாரணை செய்யும் காக்கிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதற்காக  அபராதம்  விதிக்கப்படுகிறது என கூறி அதற்கான‘‘இ”சலான் ரசீதை சம்பந்தப்பட்ட  உரிமையாளரிடம் கொடுக்க வேண்டும்.

 ஆனால், மாவட்ட காவல் எல்லையில் உள்ள  செக்போஸ்டில் பணியில் உள்ள காக்கிகள் வாகனங்களை நிறுத்துவதும் இல்லை..   விசாரணை செய்வதும் இல்லையாம். இதற்கு மாறாக வாகனத்தின் பின்புறம் உள்ள  வாகன பதிவு எண்ணை குறித்துகொண்டு ரூ.300 முதல் ரூ.5ஆயிரம் வரை அபராதம்  விதித்து விடுகின்றார்களாம்.  இவ்வாறு அபராதம் விதித்ததில் உளவுபிரிவு,  தனிப்புரிவு, மது கடத்தலை தடுக்கும் பிரிவு காக்கிகளின் பைக்குகளும்  தப்பவில்லை என்பது தான் ஹைலெட்டாம். காரணம் அவர்கள் மப்டியில் இருப்பதால்  போலீசார் என்று தெரியாமல் அபராதம் விதிக்கப்படுகிறதாம். இதில் விவரம் தெரிந்தவர்கள்  தங்களது செல்போனில் ஆப் வாயிலாக தங்களது வாகனத்தின் பதிவு எண்ணை உள்ளீடு  செய்து பார்க்கும் போது  தான் அபராதம் விதித்து இருப்பது தெரிய  வருகிறதாம்...

அதிர்ச்சிக்குள்ளாகும் காக்கிகள் செக்போஸ்ட்டில் உள்ள  காக்கிகளிடம் வந்து காக்கிகளுக்கே அபராதம் விதித்தது நீங்களாக தான்  இருக்கும் என கூறி  தலையில் அடித்தவாறு செல்கின்றார்களாம்.. இதில் ஒரு சில  காக்கிகளின் வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு 3 முறை கூட அபராதம்  விதிக்கப்பட்டுள்ளதாம்.. இப்படி அபராதம் விதிப்பது கண்டு கடலோர  மாவட்ட  சககாக்கிகளே புலம்புகின்றார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘தேனியை ஓரங்கட்டிட்டு சேலம்காரர் இலைக் கட்சியை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாக மாங்கனி மாவட்ட நிர்வாகிகள் பேசிக்கிறாங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அரசியலில்  சரியாக காய் நகர்த்துவதில் தேனிக்காரரை விட, சேலத்துக்காரர்தாங்க கில்லாடி  என்கின்றனர் மாங்கனி மாவட்டத்து இலை நிர்வாகிகள். அசம்பிளி  எலக்க்ஷன்ல எப்படியும் மெஜாரிட்டி  கிடைக்காது என்று முன்கூட்டியே அண்ணன்  கணக்கு போட்டாரு. அதே ேநரத்தில் எதிர்க்கட்சி தலைவரு நாம தான் என்பதில்  உறுதியாக இருந்தாரு. இதை மனசில் வச்சே, முடிந்தவரை தனது  ஆதரவாளர்களுக்கே  சீட்டு ஒதுக்கினாரு. இதில் கொங்கு மண்டலத்திலும், இதர மாவட்டங்களிலும்  அவங்களை எல்லாம் ப வைட்டமினை வாரி இறைச்சு ஜெயிக்க வச்சாரு. இப்படி  ஜெயிச்சவங்க  எல்லோருமே, சொந்த ஊருக்ேக தேடி வந்து ஆதரவு தெரிவிச்சிட்டு  போனாங்க. அவங்க சப்போட்டு எல்லாமே இப்போது அண்ணனுக்கு தான்.

இப்படி  பெரும்பாலானவர்களின் ஆதரவு அண்ணனுக்கு  இருந்ததால் தேனிக்காரரால், அவருக்கு  எதிராக ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் தான் தேனிக்காரரை விட,  சேலத்துக்காரர் கில்லாடி என்று சொல்கிறோம். இன்னும் கொஞ்ச நாளில் பாருங்க,   கட்சியையும் அண்ணன், அவரோட முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்ேபாறாரு  என்றும் ஆருடம் சொல்கின்றனர் மாங்கனி மாவட்டத்து இலை நிர்வாகிகள்...’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘பத்து லட்சம் கிடைத்தவுடன் கட்சியை, போட்டியை கைவிட்டு ஓடிப்போன வேட்பாளர் யாரு... எந்த கட்சி...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டுல  சமீபத்துல நடந்து முடிச்ச சட்டமன்ற தேர்தல்ல குக்கர்  கட்சிக்காரங்களுக்கும், கோயம்பேடு கட்சிக்காரர்களுக்கும் பூத் செலவுக்கு  கூட கட்சி தலைமையில இருந்து பணம் வழங்கலைன்னு  ரொம்ப பீல் பண்ணிகிட்டு  இருந்தாங்க. இந்த நேரத்துல கோயம்பேடு கட்சியில இருந்து தொகுதிக்குன்னு ஏதோ  கொஞ்சம் ப வைட்டமின் கொடுத்தாங்களாம். அதுல வெயிலூர் மாவட்டம், குப்பம் தனி   தொகுதியில கோயம்பேடு கட்சி சார்புல போட்டியிட்ட குடியாத்தம் செண்டத்தூர்  கிராமத்தைச் சேர்ந்த வேட்பாளர் சீலமானவருக்கும், அவர் செலவழிச்சத விட  அதிகமாக ரூ.10 எல் வரைக்கும்  கொடுத்தாங்களாம். ப வைட்டமின் கைக்கு  வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் கூட்டணி கட்சியான குக்கர் கட்சிக்காரங்களோட  நல்லா பேசிக்கிட்டிருந்தாராம்.

ப வைட்டமின் கைக்கு வந்தவுடனே, அவரை  தொடர்பு  கொள்ளவே முடியலையாம். செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்துவிட்டாராம். வீடு  தேடி போய், கோயம்பேடு, குக்கர் கட்சிக்காரங்கள் பார்த்தாலும், வீட்டில ஆள்  இல்லைன்னு ெசால்றாங்களாம்.  கட்சி தலைமை கொடுத்ததையே கொடுக்காம இப்படி  தலைமறைவு ஆகிட்டாரேன்னு, குக்கர், கோயம்பேடு கட்சி தொண்டர்கள்  புலம்புறாங்க. ஆனால் வேட்பாளரோ போட்ட அசலுக்கு வட்டி வந்துவிட்டது  என்று  சொல்லிக் கொண்டிருக்கிறாராம்...’’ என்றார்
விக்கியானந்தா.     

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்