உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டப்பணிகள் தொடங்கியது: சிறப்பு அதிகாரி ஷில்பா சதீஸ் பிரபாகர் தகவல்
2021-05-08@ 19:44:59

சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டப்பணிகள் தொடங்கியுள்ளதாக அத்திட்டத்தின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஷில்பா சதீஸ் பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் புகார்களை பெற்று 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அவர் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்றாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்திற்கு சிறப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா சதீஸ் பிரபாகரை நியமித்தார். இதனிடையே இத்திட்டத்தில் மொத்தம் 6 லட்சம் மனுக்கள் வந்துள்ளதாகவும் முதலில் அவற்றை கணினியில் ஏற்றி பின்னர் வகை பிரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி தீர்வு காணப்படும் என்றும் ஷில்பா சதீஸ் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக காஞ்சிபுரம் பட்டாசு ஆலை உரிமையாளரை கைது செய்தது போலீஸ்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை: கோர்ட்டில் சரணடைந்த மாமனாரை கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு.! இன்று உடல் பிரேத பரிசோதனை
காஞ்சிபுரம் அருகே அதிமுக பிரமுகரின் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி பலி: 25 பேர் படுகாயம்
கோடை உழவு செய்தால் மண் வளம், விளைச்சல் பெருகும்-விவசாயிகளுக்கு வழிகாட்டும் வேளாண் அதிகாரிகள்
சிப்காட் அரசு பள்ளியில் விழா மாணவர்களின் கல்வி நலனில் பெற்றோருக்கும் அதிக பொறுப்பு-வட்டார கல்வி அலுவலர் பேச்சு
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி