SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்... தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

2021-05-08@ 14:05:44

சென்னை : தமிழக அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் முறையாக பின்பற்றி மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், முதல் அலையை விட மோசமாக இந்த தொற்று பரவி வருகிறது. இளைஞர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. வேறு நோய்ப் பாதிப்பு இல்லாதவர்களுக்கும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தகவல்கள் அச்சம் தரக்கூடிய அளவில் உள்ளது. மருத்துவர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து செயல்படுகிறார்கள். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். முழு ஊரடங்கு அவசியம் என்று அவர்கள் கூறினார்கள். மருத்துவ நிபுணர்களும் அதையே பரிந்துரை செய்தார்கள். இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு... மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால் தொற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். இந்த சங்கிலியை உடைக்கலாம். மக்கள் அனைவரும் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். முககவசம் அணியுங்கள். கிருமிநாசினி பயன்படுத்துங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள் பழங்கள் காய்கறிகள் சாப்பிடுங்கள். அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவரின் ஆலோசனையின் படி சிகிச்சை எடுங்கள். பயப்பட வேண்டாம். இதுகுணப்படுத்த கூடிய நோய் தான். இது சவாலான காலம் தான். அதே நேரத்தில் கடக்க முடியாத காலம் இல்லை.

நேற்று நடத்திய அதிகாரிகள் கூட்டத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன். முழு உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அந்த வகையில் கொரனோ பெருந்தொற்றுக்கு எதிராக நமது நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் அடைந்துள்ளது. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நீங்கள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-1000-rains

  சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

 • girlss_saydi

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

 • amesaann11

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

 • marina-sculptures22

  மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

 • 5starrrr

  5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்