SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காகித டோக்கன்களை கொடுத்துவிட்டு கரன்சியோடு எஸ்கேப் ஆன இலை நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-05-07@ 00:03:22

‘‘மக்களை ஏமாற்றினா இப்படி தான் நடக்கும்னு இலை கட்சிக்கு சாபம் கொடுக்கிறாங்களாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேர்தலில் வெற்றி பெறுவோமா... இல்லையா என்ற சந்தேகத்துடனே இலை நிர்வாகிகள் பல தொகுதிகளில் வேலை செய்துட்டு இருந்தாங்க.. இதனால எதுக்கு பணத்தை கொடுத்துவிட்டு தலையில துண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்று பல தொகுதியில் வேலை செய்த தேர்தல் பொறுப்பாளர்கள், டோக்கன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினாங்களாம். அதாவது காகித டோக்கன்களை கையெழுத்திட்டு வாக்காளர்களிடம் கொடுத்தாங்களாம். காரணத்தை விசாரித்தபோது, தேர்தல் சமயத்துல பணப்பட்டுவாடா படுபயங்கரமா நடந்தாலும், ஆளும் கட்சிக்கு எதிரா தான் மக்கள் வாக்களிப்பாங்கனு பல்வேறு ரிப்போர்ட் இலைக்கட்சிக்கு போனதுதான் காரணமாம். இதனால வாக்காளர்களை சந்தித்து இப்போதைக்கு டோக்கன வச்சுக்குங்க, தேர்தல் வெற்றிக்கு பிறகு வெள்ளி கொலுசு, புடவை, மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள்னு உங்களுக்கு வேண்டப்பட்டத வாங்கிக்கலாம்னு ஆசைய தூண்டிவிட்டுப் போனாங்க. இப்போ தேர்தல் முடிவு வந்ததும், டோக்கன் கொடுத்த நிர்வாகிங்கள பொதுமக்கள் வலைவீசி தேடிட்டு இருக்காங்க.
மீண்டும் ஆட்சியில உட்காரலாம்னு கனவு கண்டோம். அந்த ஆசையிலதான் டோக்கன் கொடுத்தோம், இப்போ எல்லாம் தலைகீழா போச்சு. ஆனாலும் கொடுத்த டோக்கன வச்சுக்கிட்டு தேடி வராங்களேனு புலம்பும் இலைக்கட்சி நிர்வாகிங்க, மக்கள பாத்தாலே தலைமறைவாகும் நிலைக்கு ஆளாகி இருக்காங்களாம். காகிதத்தை கொடுத்துட்டு கரன்சியோடு ஓடினவங்க மாட்டினாங்க என்றால் கரும்பு பிழிற மாதிரி அந்தெந்த தொகுதி மக்கள் ரெடியாக இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குமரியில் குமுறும் குக்கர் கட்சி நிர்வாகிகள் பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் குக்கர் கட்சியினர் வாங்கிய சொற்ப ஓட்டுகள் அந்த கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சுய நலத்துக்காக சீட் வாங்கி வந்து போட்டியிட்டவர்கள்... மேலிடத்தில் இருந்து அதிகளவு தேர்தல் நிதி கிடைக்கும் என்று நினைத்தவர்கள் போட்டிக் போட்டு சீட் வாங்கினாங்களாம். ஆனால், தேர்தல் சமயத்தில் பிரசாரம் கூட செய்யாமல் முடங்கி விட்டு, கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கி விட்டாங்களாம். இதனால மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என குமரியில் குக்கர் கட்சியை சேர்ந்த பலரும் வேட்பாளர்கள் மீது கோபத்தில் இருக்கிறார்களாம். கட்சி தலைமையிடம் புகார் கொடுத்தும் அதை கேட்காமல் வேலை செய்யாதவர்களுக்கு சீட் கொடுத்து விட்டு இப்போது அவமானப்பட்டு நிற்க வேண்டி இருக்கிறது. இனி அந்த கட்சியில் இருந்தால் அரசியல் வாழ்க்கையே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களாம். ஒட்டுமொத்தமாக குக்கர் கூடாரத்தை காலி செய்து விட்டு, மாற்று  கட்சிகளுக்கு செல்ல தயாராகி விட்டனர். இது பற்றி எல்லாம் தெரிந்தும், மாவட்ட முக்கிய நிர்வாகி தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வராமல் கப்சீப் ஆக உள்ளாராம். கடைசி நேரத்தில் அவரும் கட்சி மாறி விடுவார் என்ற பேச்சு பலமாக உள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேலூர்ல வெயில் மட்டுமல்ல பண வேட்டையும் சூடாக இருக்காமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம் பிரிக்காமல் இருந்தபோதே அந்த மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்தது. இதில் தற்போது பொறுப்பில் உள்ள பெண் அதிகாரியின் அலம்பல்தான் அங்கு முக்கிய டாபிக்காக பேசப்படுகிறது. ஊராட்சிகளுக்கான ரொக்கம், வரி வசூல் புத்தகம், ரசீது புத்தகம் உட்பட 1 முதல் 31 பதிவேடுகளை வேலூரிலேயே ஸ்டேஷனரி கடைகளிலும், காட்பாடி, குடியாத்தம் என எல்லா இடங்களிலும் வாங்கலாம் என்ற நிலையில், அப்பதிவேடுகளை புதுக்கோட்டையில் இருந்து தருவித்து ஒவ்வொரு செட்டுக்கும் ரூ.19,500 செக் போட்டு தந்தே ஆக வேண்டும் என்று அப்பெண் அதிகாரி அடம் பிடிக்கிறாராம். இதை எங்க போயி சொல்ல அதிகாரிகள் தலையில் அடித்து கொள்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டெக்ஸ்டைல் தொகுதியில் ஏற்பட்ட கலவரம் பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் தொகுதிக்குட்பட்ட புறநகர் பகுதிகளான தளவாபாளையம், வாங்கல் போன்ற பகுதிகளில் கூடுதல் வாக்குகளை பெற்ற இலைகட்சிக்கு வெங்கமேடு நகரம் வரை வாக்கு எண்ணிக்கையில் சந்தோஷத்தை கொடுத்தது. இதில் 4 சுற்றுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாம். டெக்ஸ்டைல்ஸ் மத்திய நகரம், தெற்கு நகரப் பகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் கொஞ்ச கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டதாம்.. விஜயமானவருக்கு எதிராக வாக்குகள் எதிர்தரப்பு வேட்பாளரான முருகப் பெருமான் பெயரையும், திருப்பதி சுவாமியின் பெயராக கொண்டவருக்கு கிடைக்க ஆரம்பித்ததாம்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் இலைகட்சிக்கு இறங்கு முகமே ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விஜயமானவர் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டாராம். இதனால் அப்செட்டில் இருந்தவர் இரவு 12 மணியளவில் வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாராம். திடீரென வாக்கு எண்ணிக்கை குறைவானதற்கு காரணம் தெற்கு நகர முக்கிய நிர்வாகிகளின் சரியான ஒத்துழைப்பு இல்லாததுதான் என கேள்விப்பட்ட விஜயமானவர், மறுநாள் அதிகாலையிலே சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை போனில் தொடர்பு கொண்டு அர்ச்சனையுடன் வறுத்து எடுத்து விட்டாராம்.. நிர்வாகிகள் மட்டத்தில் விரைவில் மாற்றம் வரும் அனைவரும் தயாராக இருங்கள் எனவும் எச்சரித்து உள்ளாராம். இதனால் முக்கிய நிர்வாகிகள் பீதியில் இருப்பதோடு வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்களாம் என இலைகட்சிக்குள் பரவலாக பேசப்பட்டு வருகிறதாம்..’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்