SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எதிர்கட்சி தலைவர் பதவிக்காக காய் நகர்த்தும் எடப்பாடியின்‘மூவ்’ குறித்து சொல்கிறார் wiki யானந்தா

2021-05-05@ 01:03:57

‘‘மா த வாடகையை கழிக்க லஞ்சம் கேட்கும் அதிகாரி பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர  மாவட்டத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக 20 கடைகள்  உள்ளது. இந்த கடைகளுக்கான டெபாசிட் ரூ.50 ஆயிரத்தை சில  உரிமையாளர்கள் மட்டும் செலுத்தியுள்ளார்களாம். ஆனால் ஒரு சிலர்  செலுத்தவில்லையாம். இதில் டெபாசிட் செலுத்தியவர்கள் மாத வாடகையை  செலுத்தவில்லையாம்.

கடந்த சில தினங்களுக்கு முன் கடை மாத  வாடகை பாக்கியை கேட்க நகராட்சி அதிகாரிகள் சென்றார்களாம். அப்போது கடை  உரிமையாளர்கள் ஏற்கனவே நாங்கள் செலுத்திய டெபாசிட் தொகையில் இருந்து  வாடகையை கழித்து  கொள்ளுங்கள். இல்லையெனில் டெபாசிட் தொகை தராத மற்ற  கடைகளிலும் அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு வாடகையை கேளுங்கள் எனக் கூறி  அனுப்பி விட்டார்களாம். தகவல் அறிந்த நகராட்சி உயர் அதிகாரி டெபாசிட்   தொகையில் இருந்து வாடகையை கழித்து கொள்கிறோம். அதை ஒரு கடிதம் வாயிலாக கடை  உரிமையாளர்கள் எழுதி கொடுக்க வேண்டும். இதற்கு என்னை ‘தனியாக’ கவனிக்க வேண்டும் என கறாராக கூறி விட்டாராம்.

ஏற்கனவே சம்பளம் இல்லை. இந்த நிலையில் லஞ்சம் கேட்பது எந்த வகையில் நியாயம் என்று வேதனையோடு கேட்கிறார்கள். அதிகாரிகளுக்கு மனசு என்று ஒன்று இருந்தால் மற்றவர்களை வாழ வைப்பார்கள் என்று வேதனையோடு பேசிக்  கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘சர்வாதிகாரி போல செயல்பட்டவரின் தோல்வியை இலை கட்சியின் அடிமட்ட தொண்டர் முதல்  மாவட்ட நிர்வாகிகள் வரை கொண்டாடுகிறார்களாமே, அப்டியா... யார் அவரு...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சமீபத்தில்  நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜோவான ரயில் சந்திப்பு தொகுதியில் 2 முறை  எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் கோலாச்சிய வீரமானவர் 3வது முறை அதே  தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். இவரது  தோல்வியை தற்போது  இலை கட்சியின் மாவட்ட, மாநில, அடி மட்ட ெதாண்டர்கள் என்ற பதவி வித்தியாசமின்றி கொண்டாடி வருகிறார்களாம். இப்போதைக்கு ஒருங்கிணைந்த கோட்டை மாவட்டத்தில் இதுதான் பரபரப்பான பேச்சாக  உள்ளது. பிரிக்கப்பட்ட வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட ‘பத்து’ மாவட்ட  செயலாளராக இருந்தாலும், தான் வைத்தது

தான் 3 மாவட்ட இலைக்கட்சியின் சட்டம்,  தான் சொல்பவர்தான் வேட்பாளர், கட்சியிலும் தான் சார்ந்த சமூகம்தான் பெரிது  என்ற ரீதியில் சர்வாதிகாரமாக செயல்பட்டவருக்கு இந்த தோல்வி சரியான  பாடம்தான் என்பது ரத்தங்களின்  ஏகோபித்த குரலாக உள்ளதாம்.  அவர் போட்ட ஆட்கள் ஜெயித்துவிட்டார்கள்... ெதாண்டர்களை தூசு போல நினைத்து தட்டிவிட்டதால் தான்... தேர்தலில் வீரமானவரை ஓரங்கட்டி ஜெயிக்கவிடாமல் தட்டிவிட்டாங்களாம்... அது மட்டுமில்லாமல் தன்னை இலைகட்சியின்  தலைவர் போல அவர் நினைத்து கொண்டாராம். அவர் தப்பு தப்பாக பரிந்துரைத்து இலையின் தோல்விக்கு காரணமாக இருந்தார் என்று மாவட்டத்தில் இருந்து ஏகத்துக்கும் ஆதாரத்துடன் புகார் கடிதங்கள் ராயப்பேட்டை கட்சி தலைமை  அலுவலகத்தில் தபாலாக சென்று கொண்டிருக்கிறதாம்... இதன்  எதிரொலியாக விரைவில் வீரமானவர் கட்சியில் ஓரங்கட்டப்படலாம் என்ற பேச்சு  எழுந்துள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முதல்வர் வேட்பாளர் தேர்வுக்கே குடுமிபிடி சண்டை போட்டு... கட்சியின் மானத்தை வாங்கிவிட்டார்கள்.. இப்போது எதிர்கட்சி தலைவர் பதவி விஷயமும் இலையில் அதே சூழலை ஏற்படுத்தி இருக்காமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘சட்டமன்ற   தேர்தலில் இலை கட்சி தோல்வியை தழுவிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர்   பதவியை கைப்பற்ற தேனிகாரருக்கும், சேலத்துக்காரருக்கும் இடையே பெரும்   போட்டி ஏற்பட்டிருக்காம். இதில் இருந்த இடத்தில் இருந்தே  எதிர்க்கட்சி   தலைவர் பதவியை கைப்பற்ற சேலத்துக்காரர், புது வியூகம் வகுத்துள்ளாராம்.   வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்களுடன் தன்னுடைய சேலம் வீட்டில் வைத்து   பேச்சுவார்த்தை நடத்தி முடிச்சிருக்காராம். அந்தந்த  மாவட்டத்தில் வென்ற இலை   எம்எல்ஏக்களை தனக்காக, கட்சி கூட்டத்தில் பேச செய்திட வேண்டும் என   முன்னாள் அமைச்சர்களுக்கு ரகசிய அசைன்மெண்ட் கொடுத்து அனுப்பியிருக்காராம்.   

இதுல கொங்கு மண்டலம் மட்டுமல்லாது, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட   தென்மண்டலங்களில் பொறுப்பில் உள்ள முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்று,   சேலத்துக்காரரின் ஆலோசனையை ஏற்றிருக்காங்களாம். வெற்றி பெற்ற    எம்எல்ஏக்களில் 70 சதவீதம் பேர், சேலத்துக்காரரை பார்த்து ஆசி   வாங்கிட்டாங்களாம். ஆனா தேனிக்காரர் பக்கம் யாருமே போகலைன்னு   கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்