SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கதேசத்திற்கு எதிராக 2வது டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி

2021-05-04@ 00:09:12

கண்டி: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இலங்கை 209ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதுடன் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் 2 டெஸ்டகளை கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. இந்நிலையில் 2வது டெஸ்ட் கண்டியில் ஏப்.29ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களம் கண்ட இலங்கை முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 493ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 251ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனையடுத்து 2வது இன்னிங்சிலும் இலங்கை 9 விக்கெட் இழப்புக்கு 194ரன் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

ஆனால் 437ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 4வது நாளான நேற்று முன்தினம் 5 விக்கெட் இழப்புக்கு 177ரன் எடுத்திருந்தது. கடைசிநாளான நேற்று 5 விக்கெட்கள் கைவசம் இருக்க 260ரன் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் தனது 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மேலும் 50ரன்களை சேர்த்த வங்கதேசம் 227ரன்னில் ஆட்டமிழந்தது. அதனால் இலங்கை 209ரன்னில் வெற்றிப் பெற்றது. கூடவே தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த டெஸ்ட்டில் அறிமுகமான ஜெயவிக்ரமா  2இன்னிங்சிலும் 11விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வானார். முதல் டெஸ்ட்டில் 244, 2வது டெஸ்ட்டில் 118, 66ரன் குவித்த கேப்டன் கருணரத்னே தொடர் நாயகன் விருது பெற்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்