தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அசாம் காங். தலைவர் ராஜினாமா
2021-05-03@ 20:23:59

கவுகாத்தி: அசாம் மாநில பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததால், அக்கட்சியின் மாநில தலைவர் ரிபூன் போரா தனது பதவியை ராஜினாமா செய்தார். அசாமில் ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் அசாமில் மட்டுமே பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது. அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 75 இடங்களிலும் (பாஜக 60, ஏஜிபி 9, யுபிபிஎல் 6), காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களிலும் (காங்கிரஸ் 29, ஏஐயுடிஎப் 16, பிபிஎப் 4, சிபிஐஎம் 1), மற்ற கட்சிகள் 1 இடத்தையும் கைப்பற்றி உளளன.
இந்நிலையில், அசாமில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், அக்கட்சியால் வெற்றி பெறமுடியவில்லை. அதையடுத்து, அக்கட்சியில் அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபூன் போரா, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘அசாமில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தற்கு பொறுப்பேற்று எனது ராஜினாமா செய்கிறேன். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்திய வகுப்புவாத அரசியலை எதிர்த்துப் போராட முடியவில்லை.
இந்திய தேசிய காங்கிரசின் சித்தாந்தத்தை மதிக்கும் அர்ப்பணிப்புள்ள காங்கிரஸ்காரன் என்ற முறையில், எனது அரசியல் ரீதியான போராட்டத்தைத் தொடருவேன் என்பதை உறுதியளிக்கிறேன்’ என்று அந்த ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
உதய்பூரில் தையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டதற்கும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கும் தொடர்பு : திடுக்கிடும் தகவல்!!
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆந்திரப்பிரதேசத்தில் வரும் 4ம் தேதி விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!!
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து நீக்கம் : உத்தவ் தாக்கரே அதிரடி
தோண்ட தோண்ட சடலம்.. மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி... உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 நிதியுதவி அறிவிப்பு!!
அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்