அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
2021-05-02@ 12:19:37

இலுப்பூர் : அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 3 மாட்டு வண்டிகளை அன்னவாசல் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்து அதை ஓரு இடத்தில் குவித்து வைத்து பின்னர் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்த அன்னவாசல் போலீசார் நேற்று காலை பரம்பூர் பகுதியில் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
பரம்பூர் அருகே உள்ள கோரையாறு பகுதியில் உள்ள காரசூரம்பட்டியில் சோதனை மேற்கொண்டனர். போது அதன் வழியே வந்த 3 மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். இதையடுத்து மணலுடன் மாட்டு வண்டியை அன்னவாசல் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மாட்டுவண்டி ஓட்டி வந்த பரம்பூர் பகுதியை சேர்ந்த புதுப்பட்டி அழகப்பன்(49) மற்றும் குமரேசன்(25), காரசூரபட்டியை சோ்ந்த ராஜேந்திரன் ஆகிய 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்ட இடைத்தேர்தல் மது கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
வாரணவாசி ஊராட்சியில் அகற்றியதற்கு பதிலாக புதிதாக சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை
சிறுசேரியில் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் மென்பொருள் பூங்காவில் ரூ.35 கோடியில் வணிக வளாகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.16.12 கோடியில் 872 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கோவை, அருப்புக்கோட்டையில் வருமானவரித்துறை அதிரடி
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோலாகலம்: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!