SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 10 அதிமுக அமைச்சர்கள் பின்னடைவு : அதிமுகவினர் அதிர்ச்சி

2021-05-02@ 11:57:37

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளில் திமுக 141 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 92 இடங்களில் முன்னிலை வகித்து வரும் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பலர் பின்னடைவை சந்திந்து வருவது அதிமுக தலைமையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், நன்னிலம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் காமராஜ், ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மதுரைவாயல் தொகுதி அமைச்சர் பெஞ்சமின், விராலிமலை தொகுதி அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இத்தகைய சூழலில் சற்றும் எதிர்பாராத விதமாக, போடி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் பின்னடைவை சந்திப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்ஸை எதிர்த்து போட்டியிட்ட தங்கத் தமிழ்செல்வன் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

  • sand-storm-china

    அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

  • plastic-vaste-girl

    கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

  • farmeee112

    "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்